📅 Tuesday, 11 August 2026 IST | ஆடி 26, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 11, 2026 10:03 PM

FCRA மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானம் தமிழக பேரவையில் நிறைவேற்றம்..!

FCRA மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானம் தமிழக பேரவையில் நிறைவேற்றம்..!

FCRA மசோதாவை ஒன்றிய அரசு திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானம் தமிழக பேரவையில் நிறைவேற்றம்..!

சென்னை: ஒன்றிய அரசின் FCRA மசோதாவிற்கு எதிராக தவெக அரசு கொண்டு வந்த தனித்தீர்மானம், தமிழக் சட்டமன்றத்தில் நிறைவேறியது. தமிழக அரசின் தீர்மானத்திற்கு ஆதரவாக பேரவையில் பேசிய மமக எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா பேசுகையில், பல்வேறு சிறுபான்மையின அமைப்புகள் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கல்விக்கண் திறந்து வைத்தன என்பது மறுக்க முடியாத உண்மை என குறிப்பிட்டார்.

இதனிடையே ஒன்றிய அரசின் FCRA மசோதாவுக்கு எதிராக, தமிழக அரசு பேரவையில் கொண்டு வந்த தீர்மானத்துக்கு அதிமுக ஆதரவு அளிக்கவில்லை, மாறாக நடுநிலை வகிப்பதாக அறிவித்தது. இந்த மசோதா நாடாளுமன்றத்தில் பரிசீலனையில் உள்ள ஒரு முன்மொழிவு மட்டுமே. சிறுபான்மையினரின் உரிமையை பாதிக்காமல் பரிசீலித்து இம்மசோதாவை ஒன்றிய அரசு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று இந்த தீர்மானத்தின் போத்தன் விவாதத்தில் பேசிய அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டார். FCRA எதிர்ப்பு தீர்மானத்திற்கு பேரவையில் திமுக ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த மசோதா ஆபத்தான புதிய அதிகாரங்களை உருவாக்குவதாக திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் குறிப்பிட்டார். சிறுபான்மை அமைப்புகளை மிரட்ட புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக கருதுகிறோம் என்றார்.

முன்னதாக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை மசோதாவை (FCRA) ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானத்தை முன்மொழிந்தார். எந்தவொரு மசோதாவும் சொத்துரிமை பாதுகாப்பு, கூட்டாட்சி தத்துவத்தை உறுதி செய்ய வேண்டும் எனவும் கோரினார்.