📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema August 12, 2026 04:04 AM

GDN Day 4 Box Office

GDN Day 4 Box Office

சென்னை: மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கு ஜிடிஎன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. ஜிடி நாயுடுவாக மாதவனே நடித்திருந்தார். அவருடன் துஷாரா விஜயன், சத்யராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தார்கள். விமர்சன ரீதியாக சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்ற அப்படம்; வசூலிலும் ஓரளவுக்கு டீசன்ட்டான வரவேற்பையே பெற்றிருக்கிறது. இந்நிலையில் நான்கு நாட்களில் அப்படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

மாதவன் நடிப்பில் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜிடிஎன். இயக்குநர் கிருஷ்ணகுமார் அறிந்தும் அறியாமலும், ஆரண்ய காண்டம் உள்ளிட்ட பல படங்களில் காமெடி ரோலில் தோன்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் ஜிடி நாயுடுவாக மாதவன் நடித்திருக்கிறார். அவருடன் சத்யராஜ், துஷாரா விஜயன், ஜான் விஜய் என பலர் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். ரிலீஸுக்கு முன்னதாக பத்திரிகையாளர்களுக்கான காட்சியிலேயே படத்துக்கு நல்ல ஆதரவு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அது படக்குழுவுக்கு தெம்பை கொடுத்திருந்தது.

தியேட்டர்களில் எப்படி?: செலிபிரிட்டிகளிடம் சூப்பர் வரவேற்பை பெற்றது போன்று; சாமானிய ரசிகர்களிடமும் ரெஸ்பான்ஸை பெறுமா என்ற கேள்வி எழுந்தது. ப்ரோமோஷன் பணிகளில் எல்லாம் எந்தக் குறையும் இல்லை. சில நாட்களுக்கு முன்பு அந்த ஹைப்போடு தியேட்டர்களில் வெளியான படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த ஆதரவு கிடைத்திருக்கிறது. அனைவருமே படத்தை கொண்டாடி பார்க்கிறார்கள். கதை, திரைக்கதை என பல விஷயங்களில் இயக்குநர் சூப்பராக வேலை செய்திருக்கிறார் என்று புகழ்கிறார்கள்.

மாதவன் நடிப்பு: முக்கியமாக படத்தில் மாதவனின் நடிப்பைத்தான் எல்லோருமே கொண்டாடுகிறார்கள். ஏற்கனவே ராக்கெட்ரி என்ற பயோபிக் படத்தில் நம்பி நாராயணனாகவும், துரந்தர் படத்தில் அஜித் தோவலாகவும் கலக்கியிருந்தார். கரும்பு தின்ன கூலி என்பதற்கு ஏற்பதான் ஜிடி நாயுடு பயோபிக் அவருக்கு கிடைத்தது. மேடி தன் முழு உழைப்பையும் அந்தக் கதாபாத்திரம் மற்றும் படத்துக்காக போட்டது படத்தை பார்க்கும்போதே உணர முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் கருத்து: இந்தப் படம் முக்கியமான ஒன்று என்பதுதான் ரசிகர்களின் கருத்தும். இப்போது உள்ள தலைமுறையினரும் இந்தியாவின் எடிசன் என புகழப்பட்ட ஜிடி நாயுடுவை பற்றி தெரிந்துகொள்வதற்கான நல்ல வாய்ப்பை இப்படம் உருவாக்கி கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். மேலும் பல பெண்கள் தங்கள் பிள்ளைகளை தியேட்டர்களுக்கு அழைத்து வந்து இப்படத்தை பார்க்க வைப்பதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. போட்டிக்கு டிசி திரைப்படம் வந்திருந்தாலும் ஜிடிஎன் திரைப்படம் தன் தடத்தில் தடுமாறாமல் சென்றுகொண்டிருப்பதாகவே தெரிகிறது.

வசூல் நிலவரம்: இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தரவுகள்படி, ஜிடிஎன் தமிழ் வெர்ஷன் நேற்று மட்டும் மொத்தம் 43 லட்சம் ரூபாயை வசூலித்ததாம். மூன்றாவது நாளை ஒப்பிடுகையில் (1.13 கோடி) நேற்றைய வசூல் குறைவுதான். அதேபோல் தெலுங்கு வெர்ஷன் நேற்று வெறும் மூன்று லட்சம் ரூபாயைத்தான் வசூலித்திருக்கிறதாம். ஆகமொத்தம் இரண்டு மொழிகளையும் சேர்த்து அந்தப் படம் நான்கு நாட்களில் மூன்று கோடியே 15 லட்சம் ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த வசூல் கொஞ்சம் குறைவுதான் என்றாலும்; போகப்போக பிக்கப்பாகிவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது படக்குழு.