GDN Second Single
சென்னை: கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் மாதவன் நடித்திருக்கும் திரைப்படம் ஜி.டி.என். இந்தியாவின் எடிசன் என புகழப்படும் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியிருக்கிறது. நாளை மறுதினம் படம் வெளியாகவிருக்கும் நிலையில் இன்று படத்திலிருந்து இரண்டாவது சிங்கிளான மனச பறிச்சாயே பாடல் வெளியாகியிருக்கிறது. அது அனைவரிடமும் லைக்ஸை அள்ளியிருக்கிறது.
இந்திய அளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரான மாதவன்; இப்போது பயோபிக் திரைப்படங்களில் நடிப்பதை அதிகம் செய்திருக்கிறார். அவரே சில வருடங்களுக்கு முன்பு ராக்கெட்ரி திரைப்படத்தை இயக்கி நடித்தார். அது, இஸ்ரோவில் பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்வை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. அது பெரிய வெற்றியை பெறாவிட்டாலும் தேசிய அளவில் கவனம் ஈர்த்து; தேசிய விருதையும் வென்றது.
துரந்தரிலும் மாதவன்: அதேபோல் துரந்தர் படத்தில் அஜித் தோவல் கேரக்டரில் நடித்திருந்தார். அஜித் உண்மையில் எப்படி இருப்பாரோ அதேபோன்ற தோற்றத்திலும், பாடி லாங்குவேஜிலும் கலக்கினார் மேடி. அதை பார்த்து அத்தனை பேரும் வாயடைத்து போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு சீனிலும் மாதவன் நடிப்பு உலக தரத்தில் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். படமும் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி அவருக்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
ஜிடிஎன்: இப்போது அவர் அடுத்ததாக ஜிடிஎன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படமும் பயோபிக்தான். இந்தியாவின் எடிசன் என்று புகழப்படும் ஜிடி நாயுடுவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கிருஷ்ணகுமார் ராமகுமார் இதனை இயக்கியிருக்கிறார். இப்போதைய ஜென் ஸி தலைமுறையினருக்கும் இப்படத்தின் மூலம் ஜிடியின் புகழ் பரவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி புதிய கண்டுபிடிப்புகளின் தேவையையும் படம் உணர்த்தும் என நம்பலாம்.
எப்போது ரிலீஸ்?: இதில் மாதவனே ஜிடி நாயுடுவாக நடித்திருக்கிறார். அவருடன் சத்யராஜ், ஜெயராம், ப்ரியாமணி, துஷாரா விஜயன், ஜான் விஜய் உள்ளிட்ட பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருப்பதும் இப்படத்துக்கு பலம்தான். படமானது நாளை மறுதினம் தியேட்டர்களில் பான் இந்தியா படமாக ரிலீஸாகவிருக்கிறது.
இரண்டாவது சிங்கிள்: இந்நிலையில் படத்தில் இடம்பெற்றிருக்கும் மனச பறிச்சாயே என்ற பாடல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று அந்தப் பாடல் ரிலீஸாகி அனைவரையும் கவர்ந்திருக்கிறது. பாடலை உமா தேவி எழுத; சத்ய பிரகாஷும், சஞ்சனாவும் அவ்வளவு அருமையாக பாடியிருக்கிறார். கண்டிப்பாக இந்தப் பாடல் அனைவரும் விரும்பும் மெலோடியாக வரும் காலங்களில் நிலைப்பதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் தெரிகின்றன.