Gold Silver Rate Aug.28th: இப்படி ஷாக் கொடுத்துட்டியே.! இன்று மாலையில் கணிசமாக உயர்ந்த தங்கம்
Gold Silver Rate Aug.28th: இப்படி ஷாக் கொடுத்துட்டியே.! இன்று மாலையில் கணிசமாக உயர்ந்த தங்கம் விலை; தற்போதைய விலை என்ன.?
தங்கத்தின் விலை இன்று காலையில் குறைந்த நிலையில், மாலையில் கணிசமாக விலை உயர்ந்து பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலையை பார்க்கலாம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், இன்று காலையிலும் சவரனுக்கு 600 ரூபாய் குறைந்தது. ஆனால், மாலையில் சவரனுக்கு 600 ரூபாய் விலை உயர்நது அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சமீபத்திய தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து உயர்ந்து வந்த நிலையில், இந்த வாரத்தில் கணிசமாக விலை குறைந்து வந்தது. இந்த நிலையில், இன்று காலையிலும், தங்கத்தின் விலையானது கணிசமாக குறைந்தது.
அதன்படி, கிராம் ஒன்றுக்கு 75 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,650 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,17,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், மாலையில் கிராமிற்கு 75 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 14,800 ரூபாய்க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து 1,18,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
வெள்ளி விலையானது நேற்று எந்த வித மாற்றமும் இல்லாமல், கிராம் ஒன்று 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலையில் கிராமிற்கு 5 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மாலையில் 5 ரூபாய் விலை உயர்ந்து, கிராம் மீண்டும் 265 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி