Gold Silver Rate Sep.1st: மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.!
Gold Silver Rate Sep.1st: மாலையில் மகிழ்ச்சி கொடுத்த தங்கம்.! பரவாயில்லையே, இவ்ளோ குறைஞ்சுடுச்சே.! தற்போதைய விலை என்ன.?
தங்கத்தின் விலை இன்று காலை உயர்ந்த நிலையில், மாலையில் அதிரடியாக குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதை விலை நிலவரத்தை பார்க்கலாம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி கொடுத்துள்ளது. இதேபோல், வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.
தங்கம் விலை நிலவரம்
இன்றைய தங்கம் விலை
தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று காலையில் தங்கத்தின் விலையானது உயர்ந்தது. அதன்படி, கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து, ஒரு கிராம் 14,385 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 1,15,040 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து, மாலையில் அதிரடியாக விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 210 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 14,175 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 1,13,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் குறைவு
அதே நேரம், இன்று காலை வெள்ளியின் விலையானது கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 255 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 5 ஆயிரம் ரூபாய் சரிந்து, ஒரு கிலோ 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், மாலையில் வெள்ளியின் விலை கிராமிற்கு மேலும் 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி 5,000 ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி