I'm Game X Review: ஐ அம் கேம் ட்விட்டர் விமர்சனம்.. துல்கர் சல்மான் எடுத்த ரிஸ்க்.. கைகொடுத்ததா?
சென்னை: ஐ அம் கேம் திரைப்படம் செப்டம்பர் 3ம் தேதி பான் இந்தியா அளவில் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. ஆனால், இன்று மலையாளத்தில் மட்டுமே பல தியேட்டர்களில் ஐ அம் கேம் வெளியாகி உள்ளது.
தமிழில் நாளை தான் ஐ அம் கேம் திரைப்படம் அதுவும் வெகு சில தியேட்டர்களில் மட்டுமே சென்னையில் வெளியாகிறது. துல்கர் சல்மான், கயாடு லோஹர், கதிர், மிஷ்கின் நடித்த படம் இந்த வாரம் பெரியளவில் ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் குமாரின் இம்மார்ட்டல் படத்துடன் இந்த வாரம் பாக்ஸ் ஆபீஸ் போட்டியில் குதித்துள்ள ஐ அம் கேம் படத்தில் மிகப்பெரிய ரிஸ்க் எடுத்துள்ளார் துல்கர் சல்மான் என படக்குழு பொடி வைத்துப் பேசிய நிலையில், படத்தின் முக்கிய ட்விஸ்ட்டை கடைசி வரை மறைத்துள்ளோம் என துல்கர் சல்மானும் சற்றுமுன் ஒரு கைப்பட எழுதிய போஸ்ட்டை வெளியிட்டுள்ளார். இந்நிலையில், படத்தை பார்த்த மலையாள ரசிகர்கள் படத்தை பற்றி ட்விட்டரில் கொடுத்துள்ள விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..
துல்கர் சல்மான் தயாரிப்பு: லோகா படத்தைத் தயாரித்த துல்கர் சல்மானுக்கு கல்யானி பிரியதர்ஷனின் ஃபேண்டஸி படம் 300 கோடி வசூலை வாரிக் கொடுத்து மலையாளத்தின் நம்பர் ஒன் வசூல் படமாக மாறியது. காந்தா படத்தின் தோல்விக்குப் பிறகு துல்கர் சல்மான் தனது தயாரிப்பில் நடித்துள்ள ஐ அம் கேம் திரைப்படம் பான் இந்தியா அளவில் வெற்றியை குவிக்கும் என ரொம்பவே எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். கிரிக்கெட் சூதாட்டத்தை மையப்படுத்திய கதை போல டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது. கிரிக்கெட் வீரராக நடிகர் கதிர் இந்த படத்தில் நடித்துள்ளார். கயாடு லோஹர் மருத்துவராக நடித்துள்ளார்.
லோகா போல ஃபயரா இருக்கு: தைரியத்துக்கே பெயர் போனவர் தான் துல்கர் சல்மான், லோகா படத்தை போலவே இந்த படமும் செம ஃபயரா இருக்கு என மலையாள ரசிகர்கள் ஐ அம் கேம் படத்தை கொண்டாடி வருகின்றனர். மலையாளத்தில் மட்டுமே முதலில் வெளியாகி பெத்லகம் யூனிட் 200 கோடி வசூல் செய்த நிலையில், முதல் நாளில் மலையாளத்திலேயே பலரும் இந்த படத்தை பார்க்கட்டும் என படக்குழு முடிவு செய்துள்ளது போல தெரிகிறது என்கின்றனர்.
எல்லாருக்கும் பிடிக்குமான்னு தெரியல: "Not everyone's cup of tea" என இந்த ரசிகர் துல்கர் சல்மானின் வித்தியாசமான ரிஸ்க் முயற்சியை பார்த்து விட்டு அனைவருக்கும் இந்த படம் பிடிக்குமா? என்பது சந்தேகம் தான். ஒரு செட் ஆடியன்ஸுக்கு இந்த படம் பிடிக்கு என பதிவிட்டுள்ளார்.
ஃபேண்டஸி படம்: ஐ அம் கேம் படத்தில் ஒரு புதிய விஷயம் இருக்கு என்றும் சர்ப்ரைஸ் ட்விஸ்ட் என சஸ்பென்ஸ் கொடுத்து வந்த நிலையில், லோகா படத்தை போல இந்த படத்திலும் ஒரு பக்காவான ஃபேண்டஸி விஷயத்தை உள்ளே வைத்துள்ளனர். துல்கர் சல்மான் நடிப்பு இடைவேளை காட்சியில் வேறலெவல் என பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.
டெக்னிக்கல் பிரச்னை: பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் படத்தை போட்ட உடனே சவுண்ட் இல்லை என்றும் திடீரென இன்டர்வெல் காட்சியே வந்து விட்டது என்றும் துல்கர் சல்மான் தயாரிப்பு நிறுவனத்தை டேக் செய்து ரசிகர்கள் குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகின்றனர். டாக்ஸிக் படத்தை போல ரசிகர்களை சோதிக்காமல் இருந்தால் சரி என்றும் கூறுகின்றனர்.