📅 Friday, 04 September 2026 IST | ஆவணி 19, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 04, 2026 06:04 AM

Immortal First Review

Immortal First Review

சென்னை: மாரியப்பன் சின்னா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், கயாடு லோஹர் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இம்மார்ட்டல் திரைப்படம் நாளை வெளியாகிறது. இந்தியாவில் அரிதான வாம்பயர் ஜானரில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் சென்னையில் நடைபெற்றது. அதில் படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் ஹீரோவாகவும் பிஸியாக ஓடுகிறார். மூன்று மாதங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு படமாவது நடித்துவிடுகிறார். அந்தவகையில் இப்போது மாரியப்பன் சின்னா இயக்கத்தில் இம்மார்ட்டல் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடித்திருக்கிறார். படத்தின் டீசரில் கயாடுவின் கவர்ச்சியை பார்த்து அனைவருமே ரசித்தார்கள். சிவகார்த்திகேயன்கூட, ரொம்ப நல்லா இருக்கு என்று கூறியிருந்தார்.

நாளை ரிலீஸ்: படம் இந்த ஹைப்பை தாண்டி இன்னொரு விஷயத்திலும் ஹைப்பை ஏற்றியிருக்கிறது. அதாவது ஃபேன்டஸி, ஹாரர், த்ரில்லர் ஆகியவைகள் கலந்த வாம்பயர் ஜானரில் படம் உருவாகியுள்ளது. இது இந்தியாவில் பெரிதாக வந்ததில்லை என்று கூறப்படுகிறது. இப்படிப்பட்ட ஹைப்புகளுடன் நாளை படம் ரிலீஸாகவிருக்கும் சூழலில்; நேற்று சென்னையில் படத்தின் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் தங்களது விமர்சனத்தை ஷேர் செய்திருக்கிறார்கள்.

இம்மார்ட்டல் விமர்சனம்: படம் பார்த்த ஒரு ரசிகர் பேசுகையில், "படம் நன்றாகத்தான் இருக்கிறது. த்ரில்லராக இருக்கிறது. வித்தியாசமாக முயற்சி செய்திருக்கிறார்கள். படத்தில் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அந்த ட்விஸ்ட்டை சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடும். நன்றாக செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய ஆதரவை கொடுத்தால் மேற்கொண்டு நன்றாக எடுப்பார்கள். ஹீரோயினை ரொமான்ட்டிக் கேரக்டராகத்தான் ட்ரெய்லரில் காண்பித்தார்கள். ஆனால் அப்படி இல்லை. இரண்டாவது பாதியில் படம் அருமை" என தெரிவித்தார்.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்: படம் பார்த்துவிட்டு வந்த இன்னொருவர், "படத்தில் ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட்டாக இருக்கிறது. முதலில் ரொமான்ஸ் காண்பித்தார்கள். அடுத்ததாக ஹாரர் காண்பித்தார்கள். நன்றாகத்தான் உள்ளது. புதிதாக எதுவும் இல்லை. படம் க்ரியேச்சரை வைத்து செய்திருக்கிறார்கள். அது பிடித்திருந்தது. படத்தில் இசை எல்லாம் நன்று. எதையும் நான் எதிர்பார்த்து வரவில்லை. போகப்போக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வந்துவிட்டது" என்றார்.

புதிய அனுபவம்: அதேபோல் மேலும் ஒருவர், "படம் நன்றாக இருக்கிறது. முதலில் ரொமான்ஸ், லஸ்ட் ஸ்டோரி வந்தது. பிறகு ஹாரர், த்ரில்லர், ஃபேன்டஸி எல்லாம் வந்தது. விஷுவலாக பார்க்கும்போது அருமையாக இருந்தது. கிராஃபிக்ஸ் பணிகள் எல்லாம் சூப்பர். நல்ல புது முயற்சி. ஹாலிவுட் ரேஞ்சில் இருந்தது. ஜிவி சூப்பராக செய்திருந்தார். சாமின் இசையும் மிக அருமை. படம் முழுமையாக ஒரு அனுபவத்தை கொடுத்திருக்கிறது. கண்டிப்பாக புதிய அனுபவம்தான்" என கொண்டாடினார்.

ஹாலிவுட் தரத்தில்: இறுதியாக பேசிய இளைஞர், "படத்தில் சிஜி பணிகள் அபாரம். இரண்டரை வருடங்களாக உழைத்தோம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு சரியான அவுட் புட் வந்திருக்கிறது. கயாடு, ஜிவி பிரகாஷ் அருமையாக நடித்திருக்கிறார்கள். எதிரிபார்த்ததைவிட ஹாலிவுட் தரத்தில் எடுத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். படம் Bore அடிக்கவே இல்லை. எல்லாமே பக்காவாக இருந்தது. வேறு லெவலில் இருந்தது" என்றார். படத்துக்கு நிறைய பாசிட்டிவ் விமர்சனம் வந்திருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.