📅 Tuesday, 15 September 2026 IST | ஆவணி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports September 15, 2026 07:33 PM

IND vs AFG: 2வது டி20யில் இந்தியா பந்துவீச்சு தேர்வு.. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி விலகல்

IND vs AFG: 2வது டி20யில் இந்தியா பந்துவீச்சு தேர்வு..  இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி விலகல்

IND vs AFG: 2வது டி20யில் இந்தியா பந்துவீச்சு தேர்வு.. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி விலகல்

டெல்லி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் போட்டியை போல் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்த ஆட்டத்தை இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றி விடும். இந்த சூழ்நிலையில் சஞ்சு சாம்சன் முதல் போட்டியில் வெறும் 10 ரன்களில் ஆட்டம் இழந்ததார். அவருக்கு பதில் வைபவ் சூரியவன்ஷி வருவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

எனினும் இந்திய அணி தொடக்க வீரர் ஜோடியை மாற்றவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், நாங்கள் முதலில் பந்து வீச இருக்கின்றோம். ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்று எங்களுக்கு புரிந்து விட்டது. இதனால் பவுலர்கள் எவ்வாறு செயல்பட போகிறார்கள் என்ற ஐடியா கிடைத்திருக்கிறது.

இது கொஞ்சம் எங்களுக்கு சாதகமான விஷயம் தான். முதல் டி20 போட்டியில் நாங்கள் இன்னும் மிகப்பெரிய வித்தியாசத்தில் வென்றிருப்போம். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஒரு பந்துவீச்சு படையாக நாங்கள் அதிக அளவு நடு ஓவர்களின் விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்று வருண் சக்கரவர்த்திக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.

இதனால் அவருக்கு பதிலாக ரவி பிஸ்னாய் அணியில் இணைந்து இருக்கிறார் என்று கூறினார். இதனை தொடர்ந்து பேசிய ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சாட்ரான், நாங்களும் முதலில் பந்து வீச தான் இருந்தோம். நாங்கள் பாசிட்டிவான கிரிக்கெட்டை விளையாட நினைக்கின்றோம்.

முதல் போட்டியில் எங்களுக்கு ஒரு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. எனினும் நடு ஓவர்களில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். அந்த தவறை இன்றைய ஆட்டத்தில் நாங்கள் செய்ய மாட்டோம். எங்கள் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார். டெல்லியில் மழைப்பொழிவு இருந்ததால் ஆடுகளம் கொஞ்சம் ஈரமாக இருக்கின்றது. இதனால் சுழற் பந்துவீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்பது போட்டியின் போது தான் தெரியும்.