IND vs AFG: இந்திய பவுலர்கள் விக்கெட் வேட்டை.. பவர்பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான்
IND vs AFG: இந்திய பவுலர்கள் விக்கெட் வேட்டை.. பவர்பிளேவில் 4 விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான்
டெல்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச முடிவு செய்தார். காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்த முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
இளம் பேட்டிங் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷிக்கு பதிலாக அனுபவ வீரர் சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.போட்டி தொடங்கிய உடனே இந்திய பந்துவீச்சாளர்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.
பவர்பிளே ஓவர்கள் முடிவதற்குள் ஆப்கானிஸ்தான் அணி 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்து 41 ரன்களுக்கு திணறி வருகிறது. அக்சர் படேல் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரின் பந்துவீச்சில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் இப்ராகிம் சத்ரான் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, இஷான் கிஷனின் சிறப்பான ஃபீல்டிங் மற்றும் த்ரோ காரணமாக துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். அதைத் தொடர்ந்து, அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் செடிகுல்லா அடல் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அக்சர் படேல் வீசிய ஆறாவது ஓவரில், குல்பதின் நைப் அடித்த பந்தை நிதிஷ் குமார் ரெட்டி பின்னோக்கி ஓடி மிகச் சிறந்த முறையில் கேட்ச் பிடித்து அசத்தினார். இதனால் குல்பதின் நைப் 1 ரன்னில் வெளியேற, ஆப்கானிஸ்தான் அணி பவர்பிளேயிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. ஆக்கோரஷமாக பந்துவீசிய ஆர்ஸ்தீப் சிங் 2 ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார்.
இதே போன்று பவர்பிளேவில் சுழற்பந்துவீச்சாளரான அக்சர் பட்டேல் 2 ஓவரில் 8 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட் எடுத்தார். இதனையடுத்து பவர்பிளே முடிந்த உடன் 7வது ஓவரில் வருண் சக்கரவர்த்தி தனது முதல் ஓவரில் டர்வீஸ் ரசூலி விக்கெட்டை கைப்பற்ற, ஆப்கானிஸ்தான்43 ரன்களுஙககு 5 விக்கெட்டை கைப்பற்றினார்.