IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்தியா 3வது டி20 போட்டியில் 224 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்துள்ளது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
அபிஷேக் - இஷன் காட்டடி:
இதையடுத்து, ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணிக்கு சாம்சன் 3 ரன்களில் அவுட்டானார். அதன்பின்னர், ஜோடி சேர்ந்த அபிஷேக் சர்மா - இஷன் கிஷன் அதிரடியாக ஆடினார்கள். இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். அபிஷேக் சர்மா சிக்ஸர் மழை பொழிந்தார்.
இதனால், இந்தியாவின் ஸ்கோர் மளமளவென எகிறியது. அபாரமாக ஆடிய அபிஷேக் சர்மா 18 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதனால், இந்தியா7 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது. சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த இஷன் கிஷன் 18 பந்துகளில் 6 பவுண்டரி 1 சிக்ஸருடன் 37 ரன்களில் அவுட்டானார். சேஸ் பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஸ்டம்பிங் ஆனார்.
திலக் - அக்ஷர் அசத்தல்:
அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் 1 ரன்னில் அவுட்டாக மறுமுனையில் பட்டாசாய் வெடித்துக் கொண்டிருந்த அபிஷேக் சர்மா 30 பந்துகளில் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். 114 ரன்களுக்கு 1 விக்கெட் இருந்த இந்தியா 135 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழக்கவும் தடுமாறியது.
திலக் வர்மா - நிதிஷ் ஜோடி மீண்டும் ஆட்டத்தில் அனல் காட்டியது. இருவரும் பவுண்டரிகளாக விளாச இந்தியா ஸ்கோர் மளமளவென எகிறியது. சிறப்பாக ஆடிய நிதிஷ் ரெட்டி 14 பந்துகளில் 21 ரன்களுடன் அவுட்டாக, திலக் வர்மா 16 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார்.
224 ரன்கள் டார்கெட்:
கடைசியில் அக்ஷர் படேல் 14 பந்துகளில் 20 ரன்களும், கடைசி ஓவரில் பிரின்ஸ் யாதவ் 3 பவுண்டரிகளை விளாச இந்தியா 20 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 223 ரன்கள் எடுத்தது. இதனால், 224 ரன்கள் என்ற இலக்கு வெஸ்ட் இண்டீசுக்கு நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த போட்டியில் 250 ரன்களுக்கு மேல் சேஸ் செய்த வெஸ்ட் இண்டீஸ் இந்த முறையும் இலக்கை எட்டிவிடும் முனைப்பில் களமிறங்கியுள்ளது. அபாயகரமான பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் 5 ரன்னில் அவுட்டாகியுள்ளார்.ஹெட்மயர் அதிரடி காட்டி வருகிறார். மயங்க் யாதவ், ப்ரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப்சிங் அதிரடி காட்டினால் இந்த போட்டியில் இந்தியா அபார வெற்றி பெறும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷமர் ஜோசப் 54 ரன்களை வாரி வழங்கினார். ஸ்ப்ரிங்கர் 50 ரன்களை வாரி வழங்கினார். சேஸ், ஷமர் ஜோசப், ஸ்ப்ரிங்கர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் தலா 1 வெற்றி பெற்றுள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி