📅 Wednesday, 12 August 2026 IST | ஆடி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu August 12, 2026 06:01 PM

இனி என் வாழ்க்கையில தலையிடாதீங்க.. வீட்டை விட்டு வெளியேறிய ரேவதி.. கார்த்திகை தீபம்!

இனி என் வாழ்க்கையில தலையிடாதீங்க.. வீட்டை விட்டு வெளியேறிய ரேவதி.. கார்த்திகை தீபம்!

சென்னை: கார்த்திகை தீபம் சீரியலில் எல்லா சதி திட்டமும் தெரிந்த ரேவதி வீட்டிற்கு கோவத்தோடு வருகிறாள், ரேவதியை பார்த்த சாமுண்டீஸ்வரி, நீ கனடா போலயா... எப்படி திரும்பி வந்த என்று கேட்கிறாள். அதற்கு அதிரடியாக பதிலளிக்கும் ரேவதி, என்னையும் கார்த்திக் மாமாவையும் பிரிப்பதற்காக நீங்க போட்ட திட்டம் எல்லாம் எனக்கு தெரியும். கார்த்திக் தான் என்னை தொட்டு தாலி கட்டிய கணவர் என்ற உண்மையை ஏன் மறைச்சீங்க என்று கேள்வி கேட்கிறாள். இதனால் அதிர்ச்சி அடைந்த சாமுண்டீஸ்வரி, அந்த கார்த்திக் சொல்வதை கேட்டு உண்மை என்ன தெரியாம பேசாதா என்கிறார். உடனே ரேவதி, எனக்கு எல்லா உண்மையும் தெரியும், என்னை ஏமாத்துனது நீங்க தான், என்னை எதுக்கு கனடாவிற்கு அனுப்ப திட்டம் போட்டீங்க, முதல்ல அதற்கு விளக்கம் கொடுங்க என கேட்க சாமுண்டீஸ்வரி என்ன சொல்வது என்று தெரியாமல் நிற்கிறாள்.

கார்த்திகை தீபம்: சாமுண்டீஸ்வரி ரேவதி கேட்கும் கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் தவிக்கிறாள். என்னையும் என் மாமாவையும் பிரிக்க அந்த டாக்டரையே பொய் சொல்ல வெச்சி இருக்கீங்க, இது எல்லாம் தெரிந்தும் மாமா அமைதியாக இருக்க காரணம், நம்ம ரெண்டு குடும்பமும் ஒன்று சேர வேண்டும் என்பது தான். ஆனால்,இனிமேலும் இந்த வீட்டில் தங்க முடியாது என்று இனி நான் இந்த வீட்டில் இருக்க மாட்டேன் என்று சொல்ல, சாமுண்டீஸ்வரி அதிர்ச்சியில் அடைகிறாள்.

நல்ல முடிவு அக்கா: இதையடுத்து, தனது அறைக்கு சொல்லும் ரேவதி, தனது பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேற தயாராக அப்போது, ராஜராஜன், ரோகிணி, ஸ்வாதி அனைவரும் ரேவதியிடம் பேசுகின்றனர். நீ எடுக்கும் இந்த முடிவு ரொம்ப நல்ல முடிவு ரேவதி, இதுதான் உன் வாழ்க்கைக்கு நல்ல, உன் வாழ்க்கையை நீயே தீர்மானிக்க வேண்டும், தைரியமா போ என்கிறாள். பின் ஸ்வாதி, அக்கா, எனக்கு கார்த்திக் மாமாவை ரொம்பபிடிக்கும் அவர் ரொம்ப நல்லவர் அக்கா, இதுக்கு மேல நீ அவர் கூடத்தான் வாழ வேண்டும். திரும்பி நீ இந்த வீட்டுக்கு வராதே, வந்தா அம்மா உன்னையும் மாமாவையும் பிரிக்க முயற்சி செய்வாங்க, நீ கார்த்திக் மாமா கூடவே இரு, உன்னை பார்க்க வேண்டும் என தோணுச்சினா நாங்க வீட்டுக்கு வந்து பார்க்கிறோம் என்கின்றனர்.

வீட்டை விட்டு போன ரேவதி: இதையடுத்து, அனைவரிடமும் சொல்லிவிட்டு கீழே வர, அங்கு இருக்கும் சாமுண்டீஸ்வரி, என்ன ரேவதி உண்மையிலேயே வீட்டை விட்டு கிளம்பப்போறியா, நல்லறாக யோசித்துதான் இந்த முடிவு எடுத்தாயா என்று கேட்கிறாள். நல்ல யோசிச்சித்தான் இந்த முடிவை எடுத்து இருக்கேன், இனி மேல்' என் வாழ்க்கையை நான் பார்த்துக்கொள்கிறேன் இதுக்கு மேல என் வாழ்க்கையில் நீங்க தலையிடாதீங்க என்று சொல்லிவிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறாள். ரேவதியின் இந்த முடிவை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சாமுண்டீஸ்வரி அப்படியே இடித்து போய் இருக்கிறாள். ஆனால், சந்திரகலா, ரேவதி வீட்டை விட்டு போனதை நினைத்து சந்தோஷப்படுகிறாள். இப்படி எஎதிர்பாராத திருப்பங்களுடன் இந்த எபிசோட் முடிவடைந்துள்ளது. அடுத்த என்ன நடக்கப்போகிறது என்தை தவறாமல் Zee தமிழ் தொலைக்காட்சியில் பாருங்கள்.