இன்றைய நாள் யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசி பலன்கள் இதோ !
இன்றைய நாள் யாருக்கு அதிர்ஷ்டம்? 12 ராசி பலன்கள் இதோ !
இன்றைய நாள் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கும்? பணம், தொழில், குடும்பம் குறித்து முழு பலன்களை தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்களைத் தரும் நாளாக அமையும். புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதரர்கள் வழியில் எதிர்பாராத உதவிகள் அல்லது ஆதாயங்கள் கிடைக்கலாம். தந்தை வழி உறவினர்களின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். உறவினர்களின் வருகையால் வீட்டில் சந்தோஷமான சூழல் நிலவும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மற்றவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரத்தில் விற்பனை அதிகரித்து லாபம் கிடைக்கும்.
இன்று செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கலாம். குறிப்பாக தந்தை வழி உறவுகள் தொடர்பான விஷயங்களில் கூடுதல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உடல்நலத்தில், குறிப்பாக வயிறு சார்ந்த பிரச்னைகளில் கவனம் தேவை. உணவு பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். உறவினர்களின் செயல்களால் குடும்பத்தில் சிறிய மனக்கசப்புகள் ஏற்படலாம் என்பதால் அமைதியை கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் பிற்பகலுக்குப் பிறகு பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைத்து வேலைகள் சீராக நடைபெறும்.
உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டிய நாள். நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும் சூழல் உருவாகலாம். குடும்ப வாழ்க்கையில் கணவன் - மனைவி இடையே சிறிய கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிலான லாபம் கிடைக்காமல் இருக்கலாம். சக வியாபாரிகளால் சில சவால்கள் ஏற்படலாம்.
இன்றைய நாள் பல வகைகளிலும் முன்னேற்றம் தரக்கூடியதாக இருக்கும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமாக முடியும். புதிய திட்டங்கள் மற்றும் முயற்சிகளை தொடங்குவதற்கு நல்ல நேரம். வாழ்க்கைத்துணை வழியில் சில செலவுகள் ஏற்பட்டாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். இளைய சகோதரர்கள் மூலம் நன்மைகள் கிடைக்கலாம். மனதில் நம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகள் மற்றும் சக வியாபாரிகள் மூலம் ஆதாயம் பெறும் வாய்ப்பு உள்ளது.
தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. சிலருக்கு திடீர் செலவுகள் ஏற்பட்டு சேமிப்பு குறையலாம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை அவசரமாக எடுக்காமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். உணவு விஷயங்களில் கவனமாக இருக்கவும்; ஒவ்வாமை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்து கொள்வது அவசியம். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் பொறுமையுடன் சமாளிக்கவும்.
எந்த ஒரு முடிவையும் நிதானமாக சிந்தித்து எடுப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் கருத்துகளுக்கு மதிப்பு கொடுத்து செயல்படவும். கணவன் - மனைவி இடையே சிறிய பிரச்னைகள் தோன்றினாலும் பொறுமையுடன் அணுகினால் தீர்வு கிடைக்கும். தாயின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். தொழில், வியாபாரம் வழக்கமான நிலையில் தொடரும். கூட்டாளிகள் உங்கள் திட்டங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள்.
இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக செலவுகள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையின் ஆதரவு உங்களுக்கு மனநிம்மதியைத் தரும். சகோதரர்கள் வழியில் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் சமாளிக்க முடியும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். வியாபாரம் எதிர்பார்த்தபடி நடைபெறும். போட்டியாளர்கள் மூலம் மறைமுக சவால்கள் வரலாம் என்பதால் கவனமாக செயல்படவும்.
விருச்சிகம் :
இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை வழங்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்கள் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வார்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் எதிர்பாராத நன்மைகள் கிடைக்கலாம். சிலருக்கு திடீர் பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் தொடர்பாக சில சிறிய பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது.
சகோதரர்கள் தொடர்பான விஷயங்களில் சிறிய அலைச்சல் இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். அவசரமாக முடிவெடுப்பதை தவிர்க்கவும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. பிற்பகலுக்கு மேல் கணவன் - மனைவி இடையே அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களை அன்புடன் அணுகி வேலை வாங்குவது நல்ல பலனை தரும்.
இன்று பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் வார்த்தைகளில் கவனம் தேவை. பிள்ளைகள் தொடர்பான சில கவலைகள் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் காரணமாக பணநிலை சற்று பாதிக்கப்படலாம். சகோதரர்களுடன் கருத்து மோதல்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். வியாபாரத்தில் விற்பனை மிதமான அளவில் இருக்கும்.
மனதில் சில குழப்பங்கள் தோன்றினாலும் செயல்களில் கவனம் செலுத்தினால் வெற்றி கிடைக்கும். அன்றாட பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படவும். தாய்வழி உறவுகள் தொடர்பாக செலவுகள் ஏற்படலாம். கணவன் - மனைவி இடையே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சில தடைகள் ஏற்பட்டாலும் அவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. நிதானமாக அணுகினால் நிலைமை சீராகும்.
இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்ததாக இருக்கும். புதிய முயற்சிகளை தொடங்க சாதகமான சூழல் அமையும். வாழ்க்கைத்துணையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் முயற்சிகளுக்கு துணையாக இருந்து ஊக்கமளிப்பார். சிலருக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடலாம். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.