📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports July 30, 2026 01:33 AM

இந்திய அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளர் இவரா ?

இந்திய அணியின் புதிய பீல்டிங் பயிற்சியாளர் இவரா ?

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் பயிற்சியாளர் குழுவில் தொடர்ந்து மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், தற்போதைய பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப்பின் ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டாம் என்று பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு பதிலாக அனுபவம் மிக்க சுபதீப் கோஷ் இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட உள்ளார்.

புதிய பீல்டிங் பயிற்சியாளராக சேர உள்ள சுபதீப் கோஷ், உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க அனுபவம் பெற்றவர். இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகளுடன் பணியாற்றியதுடன், 2021-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பல்வேறு வடிவிலான தொடரில் இந்திய மகளிர் அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார்.

இந்திய அணியின் சமீபத்திய போட்டிகளில் கேட்ச் தவறுகள், பீல்டிங் பிழைகள் மற்றும் ஸ்லிப் பகுதியில் ஏற்பட்ட தவறுகள் அதிகரித்த நிலையில், இந்த மாற்றத்தை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.