📅 Thursday, 15 October 2026 IST | புரட்டாசி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 15, 2026 03:03 AM

இந்தியன் 2, கேம் சேஞ்சர், சர்தார் 2.. எஸ்.ஜே. சூர்யாவை நினைச்சா தான் பயமா இருக்கு.. ஜெயிலர் 2 என்ன ஆகும்?

இந்தியன் 2, கேம் சேஞ்சர், சர்தார் 2.. எஸ்.ஜே. சூர்யாவை நினைச்சா தான் பயமா இருக்கு.. ஜெயிலர் 2 என்ன ஆகும்?

சென்னை: மெர்சல் படத்தில் வில்லனாக மிரட்டிய எஸ்.ஜே. சூர்யா மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் படத்தில் முரட்டுத்தனமாக நடித்தும் அந்த படம் ஓடவில்லை. வாரிசு படத்தில் கேமியோவாக வந்த நிலையில், அந்த படமும் பாக்ஸ் ஆபீஸில் அடி வாங்கியது.

இந்தியன் 2 படத்தை விட இந்தியன் 3 படத்தில் தான் எஸ்.ஜே. சூர்யா மெயின் வில்லன் என்றாலும், அவர் வந்த ஒரு சில காட்சிகள் பயங்கர ட்ரோல் மெட்டீரியல் ஆனதுடன் படமும் ஃப்ளாப் ஆனது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்திலும் நம்ம நடிப்பு அரக்கன் எஸ்.ஜே. சூர்யா தான் வில்லன். ஆனால், அந்த படமும் பல்பு வாங்கி படுதோல்வியை சந்தித்தது தான் மிச்சம்.

சொதப்பும் படங்கள்: எஸ்.ஜே. சூர்யா ஒவ்வொரு படத்திலும் உயிரைக் கொடுத்து நடித்தாலும் அவர் வில்லனாக நடித்த ஒரு சில படங்களை தவிர பல படங்கள் பல்பு வாங்கி வருவது தான் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இப்போதைக்கு இருக்கும் ஒரே டென்ஷன். மார்க் ஆண்டனி படமே விஷாலுக்கு ஓடியதை விட எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்புக்குத்தான் அதிகளவில் ஓடியது. ஆனால், ஸ்பைடர், இந்தியன் 2, கேம் சேஞ்சர், சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் 2 உள்ளிட்ட படங்கள் பயங்கரமாக சொதப்பி விட்டன.

காமெடி வில்லன்: வில்லத்தனத்தை நம்பியார் போல பண்ணாமல் அந்த காலத்து அசோகன் ஸ்டைலில் காமெடி கலந்து எஸ்.ஜே. சூர்யா நடித்து அதகளப்படுத்துகிறார். இந்த ஆண்டு பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்திலும் எஸ்.ஜே. சூர்யா காமெடி வில்லனாகவே நடித்திருப்பார். ஆனால், அந்த படமும் அட்டு ஃப்ளாப் ஆனது.

எஸ்.ஜே. சூர்யாவை நினைச்சா தான் பயமா இருக்கு: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்னன், வித்யா பாலன், மிதுன் சக்கரவர்த்தி என ஏகப்பட்ட நடிப்பு பட்டாளம் உள்ளது. கூடவே நம்ம எஸ்.ஜே. சூர்யாவும் ஒன் மோர் எல்லாம் கேட்டு நடிப்பில் மிரட்டியுள்ளார். ஆனால், அவரது கதாபாத்திரம் சரியாக படத்தில் உட்காராமல் போய் விட்டால், படத்துக்கு பிரச்னை என்கின்றனர். எஸ்.ஜே. சூர்யாவை வைத்து நெல்சன் டார்க் காமெடியில் சரியாக விளையாடி இருந்தால் ஜெயிலர் 2 பிளாக்பஸ்டர் அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்கின்றனர். என்ன ரிசல்ட் என்பது நாளை காலை தெரிந்து விடும்.