Politics
September 07, 2026 10:03 PM
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமல்
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. உரிய ஆவணங்களின்றி ரூ.50,000-க்கு மேல் பணம் கொண்டுசெல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த மாதம் அக்.6ம் தேதி இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை அக்.09ம் தேதி நடைபெற உள்ளது.