📅 Tuesday, 18 August 2026 IST | ஆவணி 2, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 18, 2026 10:03 AM

“இது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும் அதனால்..”.. கோலி சொன்ன அட்வைஸ்.. ஜோர்டன் காக்ஸ் உருக்கம்

“இது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும் அதனால்..”.. கோலி சொன்ன அட்வைஸ்.. ஜோர்டன் காக்ஸ் உருக்கம்

“இது வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரும் அதனால்..”.. கோலி சொன்ன அட்வைஸ்.. ஜோர்டன் காக்ஸ் உருக்கம்

ஹெடிங்லே: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் புதன்கிழமை அன்று ஹெடிங்லேயில் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து அணியின் இளம் பேட்ஸ்மேன் ஜோர்டன் காக்ஸ், இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனக்கு வழங்கிய அறிவுரைகளை நினைவு கூர்ந்துள்ளார். ஜேக்கப் பெத்தேல் முழங்கால் காயம் காரணமாக விலகியதால், 25 வயது ஆன இளம் வீரர் ஜோர்டான் காக்ஸுக்கு இந்த டெஸ்ட் தொடரில் விளையாடும் முக்கிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

விராட் கோலி தன்னிடம் கூறிய அறிவுரை குறித்து ஜோர்டன் காக்ஸ் கூறுகையில், "டெஸ்ட் அறிமுகப் போட்டியின் போது கோலியிடம் சில கேள்விகளைக் கேட்டேன். அதற்கு அவர், 'இந்த தருணத்தை ரசித்து விளையாடு. அறிமுகப் போட்டி என்பது வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே வரும். உனக்காகவும், உனது குடும்பத்தினரின் தியாகத்திற்காகவும் சிறப்பாக விளையாடி காட்டு' என்று கூறினார். அந்த வார்த்தைகளை நான் எப்போதும் என் மனதில் வைத்திருப்பேன்" என்றார்.

கடந்த 2026 ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் ஜோர்டன் காக்ஸ் இடம் பெற்றிருந்தார். அந்தத் தொடரில் அவர் எந்தப் போட்டியிலும் விளையாடாவிட்டாலும், விராட் கோலியுடன் சுமார் 4 மாதங்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். "நான் எப்போது சோர்வாக உணர்ந்தாலும், கோலிக்கு உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பி உதவி கேட்பேன். அவர் எப்போதும் எனக்கு உதவத் தயாராக இருப்பார்" என்றும் காக்ஸ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் காக்ஸ் 3-வது வரிசையில் களம் இறங்கவுள்ளார். பென் ஸ்டோக்ஸ் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாலும், பெத்தேல் காயமடைந்ததாலும் இங்கிலாந்து அணியில் இவருக்கு முக்கிய பேட்டிங் வரிசை இடம் கிடைத்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தனது டெஸ்ட் அறிமுகத்தை பெற்ற காக்ஸ், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக தனது திறமையை நிரூபித்து நிரந்தரமாக அணியில் இடம் பிடிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். கடந்த 2024 முதல் எசெக்ஸ் அணிக்காக விளையாடி வரும் காக்ஸ், முதல் தர கிரிக்கெட்டில் 68 என்ற பேட்டிங் சராசரியுடன் சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.