பாஜகவின் சித்து விளையாட்டு.. கோரிக்கையுடன் தவெக அரசுக்கு IUML ஆதரவு
தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால் ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுப்பறி நீடித்து வந்தது. 108 வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைப்பதற்காக தீவிரமாக முயற்சி செய்து கொண்டிருந்தது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்று வெற்றி பெற்ற கட்சிகளின் ஆதரவினை தவெக கோரி வந்தது. இதனையடுத்து ஆளுநர் ஆட்சி வந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் தவெகவை ஆதரிக்க இடதுசாரி கட்சிகள் சம்மதம் தெரிவித்தன.இந்நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஐயூஎம்எல் எம்எல்ஏக்களின் ஆதரவுடன் கடந்த மே 10 ஆம் தேதி முறையாக தமிழக முதலமைச்சராக தவெக விஜய் பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து இன்று சட்டப்பேரவையில் இன்று தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென ஆளுநர் உத்தரவிட்டார். அதன்படி, இன்று நம்பிக்கை இல்லா தீர்மானம் சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனையடுத்து தவெக அரசு க்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ கட்சிகள் தமிழக வெற்றி கழகத்துக்கு ஆதரவு தெரிவித்து, அதற்கான காரணம் குறித்தும் சட்டமன்றத்தில் பேசி வருகின்றனர். அந்த வகையில் IUML கட்சியும் தவெக அரசு தொடர்வதற்கு ஆதரவு அளித்து, அதற்கான காரணத்தையும் விளக்கியுள்ளனர்.இதுக்குறித்து IUML கட்சியை சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகான் பேசுகையில், ஒன்றிய பாஜக அரசு மற்றும் ஜனநாயக விரோத சக்திகளின் சித்து விளையாட்டில் தமிழ்நாடு சிக்கி விடக்கூடாது என்ற அடிப்படையில் இந்த அரசுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை இந்தியன் முஸ்லீம் லீக் எடுத்துள்ளது. தேசிய உரிமைப்பாடு, சமூக நல்லிணக்கம், தமிழ் மொழியின் சிறப்பு, மாநில சுயாட்சி, சிறும்பான்மையினர் பாதுகாப்பு ஆகியவற்றை இந்த அரசு நிலைநாட்ட வேண்டும்.முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்கள் நிறுத்தப்படாமல் தொடர வேண்டும். அதோடு இந்த அரசு மாநில உரிமைகளை நிலைநாட்ட உறுதியாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், நாங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், சமுதாயத்தின் குரலாக இருப்பதால் சட்டமன்றத்தில் பேசுவதற்கு அதிகம் வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்துள்ளார் ஷாஜகான்.மாற்றமல்ல யாராலும் சகிக்கவே முடியாத துர்நாற்றம்.. தவெகவை கடுமையாக விமர்சித்த டிடிவி தினகரன்இதே போல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்களும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும், அமமுகவை சார்ந்த மன்னார்குடி எம்எல்ஏ காமராஜும் தன்னுடைய ஆதரவினை வழங்கியுள்ளார். நேற்றும், இன்றும் ஆதரித்தேன். நாளையும் ஆதரிப்பேன். இதனால் என்னை கட்சியில் இருந்து நீக்கி விட்டார்கள். முதல்வர் என்னை காப்பாற்றுவார் என தவெகவுக்கு ஆதரவாக பேசியுள்ளார் காமராஜ்.இதனிடையில் முன்னதாக ஐயூஎம்எல் திமுக கூட்டணியிலே தொடர்வதாக திட்டவட்டமாக தெரிவித்தது. அவர்ல் எடுக்கும் முயற்சிக்கே கட்டுப்படுவோம் எனவும் அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் கூறியிருந்தார். இதனையடுத்து கடைசியாக தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் முடிவை எடுத்தது IUML. இதனை தொடர்ந்து தற்போது நம்பிக்கை வாக்கெடுப்பில் தங்களுடைய ஆதரவினை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.