📅 Sunday, 02 August 2026 IST | ஆடி 17, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 02, 2026 07:30 AM

இயல் விருதுக்கு ஓவியர் டிராட்ஸ்கி மருது தேர்வு

இயல் விருதுக்கு ஓவியர் டிராட்ஸ்கி மருது தேர்வு

தமிழ் இலக்​கிய உலகில் வழங்​கப்​படும் மிக​வும் மதிப்​புமிக்க சர்​வ​தேச அங்​கீ​காரங்​களில் ஒன்​று, கனடா​வின் தமிழ் இலக்​கி​யத் தோட்​டம் வழங்​கும் ‘அ.​முத்​துலிங்​கம் இயல் விருது’. உலக அளவில் தமிழ் மொழி, இலக்​கி​யம், கலை மற்​றும் ஆய்​வு​களுக்கு வாழ்​நாள் பங்​களிப்பு அளித்த சான்​றோர்​களைக் கவுரவிக்​கும் இந்த விருது, 2025ஆம் ஆண்​டுக்​காகப் பிரபல காட்​சிப்பதிவாளர் மற்​றும் ஓவியர் டிராட்​ஸ்கி மருதுக்கு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

எழுத்து வடி​வில் இருக்​கும் இலக்​கி​யத்​தை, காட்சி வடிவத்​துக்கு நகர்த்​திச் சென்ற ஒரு முன்​னோடிக்கு இயல் விருது வழங்​கப்​பட்​டிருப்​பது விரு​தின் எல்​லையை விரிவுபடுத்​தி​யுள்​ளது.

கோடு​களால் இயங்​கும் கலைஞன்: தமிழ் இதழியல், சினி​மா, அனிமேஷன் மற்​றும் கலை உலகுக்கு ஐந்து தசாப்​தங்​களுக்​கும் மேலாகத் தீவிரப் பங்​காற்றி வருபவர் ஓவியர் டிராட்​ஸ்கி மருது. நவீன ஓவி​யத்​தின் சாத்​தி​யக்​கூறுகளைத் தமிழ்ச் சூழலில் முதன்​முதலில் காட்​சிப்​படுத்​தி​ய​வர்​களில் முக்​கிய​மானவர்.