ஜெயிலர் 2 ட்விட்டர் விமர்சனம்: மெகா பிளாக்பஸ்டர், வேற மாதிரி, சிறப்பான சம்பவம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியிருக்கிறது. தலைவர் படம் ரிலீஸாகும் நாளில் வேலையாவது, காலேஜாவது என்று ரசிகர்கள் லீவு போட்டுவிட்டு தியேட்டர்களுக்கு சென்றிருக்கிறார்கள்.டைகர் முத்துவேல் பாண்டியனை திரையில் பார்த்து ரசிப்பவர்கள் படம் குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், அனிருத் இசையில்உருவான ஜெயிலர் 2 குறித்து எக்ஸ் தளத்தில் கூறப்பட்டிருப்பதாவது,முதல் பாதியில் காமெடி வேற லெவலில் இருக்கிறது. சிரித்து சிரித்து முடியவில்லை. லவ் யூ நெல்சா. கெரியர் பெஸ்ட் படமாக வந்திருக்கிறது. தலைவருக்கு ஒரு சூப்பர் ஹிட் பார்சல். ஜெயிலர் 2 படம் ரூ. 1000 கோடி அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. ஜெயிலர் படத்தை விட 10 மடங்கு மாஸாக இருக்கிறது. செம ஃபன், குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழலாம்.இடைவேளை காட்சி எல்லாம் மாஸ், கொல மாஸ். அனிருத் இசையை பாராட்டியே ஆக வேண்டும். அந்த அளவுக்கு தலைவருக்காக பார்த்து பார்த்து இசையமைத்திருக்கிறார். இது போதும் நெல்சா எங்களுக்கு. தலைவருக்கு சூப்பரான படம் கொடுத்துவிட்டீர்கள். பிளாக்பஸ்டரே தான்.தலைவரை பயங்கர ஸ்டைலாக காட்டியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். தரமான, சிறப்பான சம்பவம் செய்திருக்கிறார் நெல்சன். தலைவரின் ஸ்டைல், ஸ்வாகை பார்த்து புல்லரித்துவிட்டது. சுராஜ், யோகி பாபு கதாபாத்திரங்கள் சிறப்பாக இருக்கிறது. தலைவர் கெரியரில் மறக்க முடியாத வெற்றிப் படம் ஜெயிலர் 2 என தாராளமாக சொல்லலாம். டீக்கடை காட்சி சிறப்பு. திரையை விட்டு கண்ணை எடுக்க முடியவில்லை. அந்த அளவுக்கு படம் விறுவிறுப்பாக செல்கிறது. வார இறுதி நாட்களில் மீண்டும் பார்த்து என்ஜாய் பண்ண போகிறோம்.இது டைகர் முத்துவேல் பாண்டியன் ஆட்டம். தலைவர் மிரட்டியிருக்கிறர். எஸ்.ஜே. சூர்யா அவர் பங்கிற்கு மாஸ் காட்டியிருக்கிறார். பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் கதாபாத்திரம் சூப்பராக இருக்கிறது. மனிதர் ஸ்டைலாக இருக்கிறார். பாக்ஸ் ஆபீஸில் முத்துவேல் பாண்டியனின் ஆட்டத்தை யாராலும் தடுக்கவே முடியாது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் கவுரவத் தோற்றம் வித்தியாசமாகவும், நன்றாகவும் இருக்கிறது.கிளைமாக்ஸ்னா இது தான் கிளைமாக்ஸ். வாவ். 50 வருஷமா என்ன யார் யாரோ அழிக்க ட்ரை பண்ணி ஆனால் யாராலயும் முடியல என ரஜினிகாந்த் பேசும்போது செமயா இருக்கு. ஜெயிலர் 2 படத்துடன் இந்த வெற்றிக் கூட்டணி முடியாது போன்று. ஜெயிலர் 3 வரும் என ஹின்ட் கொடுத்திருக்கிறார்கள். தலைவர் ஆட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.ரஜினி, ஒவ்வொரு இந்தியன் மனதிலும் இருக்கிறார்: ஜெயிலர் 2 அனிருத்ஜெயிலர் 2 படத்தின் ரிலீஸ் நாளான இன்று மட்டும் டிக்கெட் முன்பதிவு மூலம் ரூ. 50 கோடி வசூல் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் இன்று பாசிட்டிவ் விமர்சனங்களாக வரத் துவங்கியிருப்பதால் வார இறுதி நாட்களில் ஜெயிலர் 2 படத்தின் வசூல் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்காலையிலேயே பாசிட்டிவ் விமர்சனங்களாக வருவதை பார்த்து ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆனந்த கண்ணீர் விடுகிறார்கள். கடவுளே, ஜெயிலர் 2 பிளாக்பஸ்டராக வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்தது வீண் போகவில்லை என்கிறார்கள்.