ஜிம்பாப்வேக்கு எதிரான 3வது டி20 கிரிக்கெட்; இந்தியா பேட்டிங்
ஹராரே: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் இளம் வீரர் சூர்யவன்ஷியின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் குவித்தது.
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இருபோட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஏற்கனவே தொடரை வென்று விட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணிக்கு சூர்யவன்ஷியும், அபிஷேக் ஷர்மாவுக்கு துவக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் ஏமாற்றம் அளித்த அபிஷேக் ஷர்மா (2) இந்த ஆட்டத்திலும் சொற்ப ரன்னில் வெளியேறினார். அதன்பிறகு, சூர்யவன்ஷி மற்றும் இஷான் கிஷான் அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர். இஷான் 29 ரன்னில் அவுட்டானாலும், மறுமுனையில் அதிரடியாக ஆடிய சூர்யவன்ஷி 31 பந்தில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 2வது அரைசதத்தை பதிவு செய்தார்.
49 பந்தில் 81 ரன் எடுத்திருந்த போது சூர்யவன்ஷி ஆட்டமிழந்தார். அதன்பிறகு, ஸ்ரேயாஷ் ஐயர் 27 ரன்னும், ரிங்கு சிங் 25 ரன்னும் குவித்தனர். இதனால், 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 192 ரன் குவித்தது. ஜிம்பாப்வே அணி தரப்பில் எவான்ஸ் 2 விக்கெட்டும், ராசா, முஷர்பானி, மாதவரே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்