📅 Thursday, 24 September 2026 IST | புரட்டாசி 8, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 23, 2026 11:04 PM

ஜனவரி 1ம் தேதி இரண்டாக பிரியும் ஐடிசி நிறுவனம்..... ஹோட்டல் வணிகம் தனியாக பிரிப்பு....

ஜனவரி 1ம் தேதி இரண்டாக பிரியும் ஐடிசி நிறுவனம்..... ஹோட்டல் வணிகம் தனியாக பிரிப்பு....

நாட்டின் மிகப்பெரிய எஃப்எம்சிஜி நிறுவனமான ஐடிசி நிறுவனம், அதன் ஹோட்டல் வணிகத்தை பிரிப்பதற்காக தேதியை அறிவித்துள்ளது. அதாவது 2025ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அன்று ஹோட்டல் வணிகத்தை பிரிப்பதற்காக தேதியாக தெரிவித்துள்ளது. ஐடிசி, நேஷனல் கம்பெனி லா ட்ரிப்யூனலில் (என்சிஎல்டி) ஒரு உத்தரவைப் பெற்ற பிறகு, அதன் ஹோட்டல் வணிகத்தை பிரிப்பதற்கான தேதி நிர்ணயித்துள்ளது. பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனம், ஒப்பந்தத்தை அனுமதிப்பதற்கான உத்தரவை NCLT இலிருந்து பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐடிசி நிறுவனம் மற்றும் ஐடிசி ஹோட்டல் இரண்டாக பிரிக்கப்படும். இதையடுத்து முதலீட்டாளர்கள் ஐடிசி நிறுவனத்தின் 10 பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஹோட்டல் பங்கு வழங்கப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளன. ஐடிசி பங்குகள் மதியம் 12 மணியளவில் உயர்வுடன் நிறத்தில் வர்த்தகம் செய்யப்பட்டு, என்எஸ்இ சந்தையில் ஒரு பங்கு விலை 0.47 சதவிகிதம் ரூ. 472.30 ஆக இருந்தது. இந்த ஆண்டு ஜூன் மாதம், நிறுவனத்தின் பங்குதாரர்கள் குழுமத்தின் ஹோட்டல் வணிகத்தை பிரிக்க ஒப்புதல் அளித்தனர். 99.6 சதவீத பங்குதாரர்கள் பிரிவினைக்கு ஆதரவாகவும், 0.4 சதவீதம் பேர் எதிராகவும் வாக்களித்துள்ளனர். ஐடிசியின் ஹோட்டல் பிரிவு, சில்லறை விற்பனை, MICE மற்றும் மார்க்கீ நிகழ்வுகளில் இருந்து வலுவான வளர்ச்சியின் ஆதரவுடன் காலாண்டில் அதிக வருவாய் மற்றும் லாபத்தை அடைந்துள்ளது. பிரிவின் வருவாய் 2024-25 ம் நிதியாண்டின் 4வது காலாண்டில் 15.6 சதவீதம் அதிகரித்து ரூ.2,989 கோடியாகவும், EBITDA 26.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,049 கோடியாகவும் இருந்தது.2024ம் ஆண்டு செப்டம்பர் உடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் நிறுவனம் ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 1.8 சதவீதம் அதிகரித்து ரூ. 5,054.43 கோடியாகப் பதிவாகியுள்ளது. ஐடிசியின் ஒழுங்குமுறைத் தாக்கல் படி, நிறுவனம் முந்தைய ஆண்டில் ரூ.4,964.52 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் பெற்றுள்ளது.எதில் முதலீடு செய்தால் கோடீஸ்வரர் ஆகலாம்!