காலை உணவு திட்ட விரிவாக்க சர்ச்சை!
காலை உணவு திட்ட விரிவாக்க சர்ச்சை! - சமூக நீதித்துறை பணத்தை எடுத்துச் செலவிடுவதா?
முன்னேறிய மாநிலமாகச் சொல்லப்படும் தமிழ்நாட்டில், பழங்குடிகள் மற்றும் பட்டியல் சமுதாய மக்களின் வாழ்க்கைத்தரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது.
காலை உணவுத் திட்டத்தை 8-ம் வகுப்பு வரை விரிவுபடுத்திய அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு கிடைத்த அதேவேளையில், அதற்காகப் பயன்படுத்தப்பட்ட நிதி புதிய விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. `ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல நிதியில் கைவைத்தது, சமூக நீதி அரசியலுக்கே சவால் விடுத்திருக்கிறது’ என்று ஆவேசப்படுகிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்.
இது பற்றி நம்மிடம் பேசிய கல்வித்துறை உயரதிகாரி ஒருவர், “தி.மு.க அரசால் கொண்டுவரப்பட்ட ‘நான் முதல்வன் திட்டம்’, ‘மகளிர் விடியல் பயணம்’ திட்டங்களின் பெயரை மாற்றியதுபோல, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரும் மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது, ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ என மாற்றம் செய்திருக்கிறது த.வெ.க அரசு.
மேலும், 5-ம் வகுப்பு வரை வழங்கப்பட்டுவந்த காலை உணவை 8-ம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்து உத்தரவிட்டிருக்கிறார் முதலமைச்சர். அது வரவேற்பைப் பெற்றிருந்தாலும், பழங்குடிகள் மற்றும் பட்டியல் சமூக மக்களின் சிறப்பு மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 69 கோடி ரூபாயை எடுத்து, இந்தத் திட்டத்துக்கு மடைமாற்றம் செய்திருப்பது சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.
ஏற்கெனவே 1 முதல் 5-ம் வகுப்பு வரை காலை உணவு வழங்கப்பட்டுவரும் நிலையில், செப்டம்பர் 17-ம் தேதியிலிருந்து 8-ம் வகுப்பு வரை உணவு வழங்கப்படவிருக்கிறது. இதற்காக 217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் முன்னேற்றத்துக்கான சிறப்பு செயல்திட்ட நிதியிலிருந்து 63.15 கோடி ரூபாயும், பழங்குடியினர் முன்னேற்றத்துக்கான சிறப்பு செயல்திட்ட நிதியிலிருந்து 6.11 கோடி ரூபாயும் பெறப்பட்டிருக்கிறது” என்றார்.
அந்த மக்களின் வாழ்விடங்களுக்குச் சென்று பார்த்தால் தெரியும், எத்தகைய துயரத்தில் இருக்கிறார்கள் என்று. முதல் தலைமுறையாகக் கல்வி பயிலும் இவர்களின் குழந்தைகள், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பித்துவிட்டு, கிடைக்காமல் காத்துக்கிடக்கிறார்கள். கூடுதலாக நிதி ஒதுக்கி, சக மக்களைப் போலவே கல்வியிலும் பொருளாதாரத்திலும் மேம்படுத்தவேண்டிய அரசுகள், இவர்கள் மேம்பாட்டுக்காகப் பயன்படவேண்டிய நிதியில் கைவைப்பது எந்தவிதத்தில் நியாயம்... ஆதிதிராவிடர்களுக்கு அநீதி இழைத்துக்கொண்டு, துறையின் பெயரை மட்டும் சமூக நீதித்துறை என மாற்றி என்ன பயன்... இந்த விஷயத்தில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு மௌனம் காப்பதுதான் அதிர்ச்சியாக இருக்கிறது” என ஆதங்கத்தைக் கொட்டினார்.
தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் மூத்த தலைவர் வி.பி.குணசேகரன், “ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட மக்களான பழங்குடிகள், பட்டியல் சமுதாய மக்களின் முன்னேற்றத்துக்காக, மத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாயை ஒதுக்கீடு செய்கிறது. ஆனால், மாநில அரசுகள் அந்தத் தொகையை மக்களிடம் கொண்டு சேர்க்காமல், திருப்பி அனுப்புவதை வாடிக்கையாகக்கொண்டிருக்கின்றன. கடந்த தி.மு.க அரசு ஆண்டுக்கு 200 முதல் 300 கோடி ரூபாய் நிதியை, திருப்பி அனுப்பியது. இந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு துறைகளுக்கு மாற்றியது போல, இந்த அரசும் அதே பாணியைப் பின்பற்றுவது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்கள் நிதியில் கைவைப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றார்.
சமூக நீதித்துறையின் அரசுச் செயலாளர் சுப்பையன் “குடிநீர் விநியோகம், உணவு வழங்கல் என இது மாதிரியான திட்டங்களுக்கு அரசின் மூன்று துறைகள் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கம். காலை உணவுத் திட்டத்தில் அனைத்துப் பிரிவு மாணவர்களும் பயன் பெறுவார்கள் என்றாலும், குறிப்பிட்ட சதவிகிதத்தில் எஸ்.சி., எஸ்.டி மாணவர்கள் பயன்பெறுவார்கள். அதன் அடிப்படையில்தான் நிதியிலிருந்து ஒதுக்கப் பட்டிருக்கிறது. மற்றபடி, நிதியை எடுத்து வீணாக்கவில்லை” என்றார்.
சாப்பாடு எல்லோருக்கும்... செலவு மட்டும் எஸ்.சி., எஸ்.டி நிதியிலிருந்தா?