📅 Tuesday, 13 October 2026 IST | புரட்டாசி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 13, 2026 12:04 AM

காங்கிரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்

காங்கிரசை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்

தமிழக பா.ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் கட்சித்தலைவர் ராகுல்காந்தி, ஆணாதிக்கத்தை எதிர்ப்பதாக நாடகம் நடத்தி வரும் வேளையில், தனது கட்சியை சேர்ந்த உள்மணிப்பூர் எம்.பி.யும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அங்கோம்சா பிமோல் அகோய்ஜம் மீது பல்கலைக்கழக மாணவிகள் 11 பேர் பாலியல் தொல்லை புகார் அளித்தனர். இது குறித்து காங்கிரஸ் மவுனம் காத்து வருகிறது.

பல்கலைக்கழக உள்விவகார கமிட்டி இதனை விசாரித்து, அவரை பதவி நீக்கம் செய்துள்ளதுடன், அவருக்கு கடுமையான தண்டனை வழங்கவும் பரிந்துரைத்துள்ளது. பெண்ணுரிமை பேணாத காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, காங்கிரசின் ஓரவஞ்ச னைகளை கண்டிக்கும் பதாகைகள் ஏந்தி இன்று (திங்கட்கிழமை) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மாவட்ட தலைவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.