காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு
காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
Tamil Nadu Weather Update (July 27): "தமிழகத்தில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டது."
Tamil Nadu Weather Today: தமிழகத்தில் நிலவி வரும் வானிலை மாற்றம் மற்றும் மழை முன்னறிவிப்பு குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இருப்பினும், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இயல்பான அளவைக் காட்டிலும் 5 டிகிரி செல்சியஸ் வரை அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதனிடையே, தமிழகக் கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவி வருகிறது.
இந்தக் காற்றழுத்த தாழ்வுப் பாதையின் காரணமாக, இன்று (ஜூலை 27) மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், மாநிலத்தின் ஏனைய சில பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் நேரத்தில் அதிகபட்சமாக 34°C வெப்பநிலையும், இரவில் குறைந்தபட்சமாக 27°C வெப்பநிலையும் பதிவாக வாய்ப்புள்ளது. பிற்பகல் மற்றும் மாலை வேளைகளில் மிதமான மழை மற்றும் சாரல் பெய்ய 65% வரை வாய்ப்புள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28°C ஆகவும் நிலவும். நாள் முழுவதும் மேகமூட்டமான சூழல் நிலவுவதுடன், பிற்பகலுக்கு மேல் சில இடங்களில் லேசான மழை அல்லது சாரல் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி