Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: மாட்டிக்கொண்ட மாயா, மகேஷ்.. உஷாரான கார்த்திக்! அடுத்து நடக்கப்போவது என்ன?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்பதை கீழே காணலாம்.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு ஒன்பது மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் மாயா மாறுவேடத்தில் வந்திருக்க கார்த்திக்கு சந்தேகம் உருவான நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கொலை செய்த போட்டோ:
அதாவது கார்த்திக் மகேஷ் மற்றும் மாயாவை தேடி வர இருவரும் வெளிநாட்டு பயணிகள் குறித்து அலுவலகத்திற்கு சென்று இருப்பதாக சொல்ல சொல்லி கிளம்பிச் சென்று விடுகின்றனர்.
மறுபக்கம் போட்டோகிராபர் போட்டோக்களை ஆராயும்போது அதில் சிவனாண்டி கொலை செய்த வீடியோ ஆதாரம் இருக்க அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கேமராமேன் ஸ்டூடியோ ஓனரிடம் விசாரிக்க அவர் நமக்கு பிரச்சனை வந்தால் என்ன செய்வது? டெலிட் செய்து விடு என்று சொல்ல கேமராமன் இது ஏதோ தப்பாக இருக்கிறது என யோசித்து அதை சேவ் செய்து வைக்கிறான்.
திணறும் மகேஷ், மாயா:
அடுத்ததாக கார்த்திக் வீட்டுக்கு வர மகேஷ் மாயா ஓடி ஒளிந்து கொள்கின்றனர். இந்த விஷயத்தை பார்த்த மயில்வாகனம் ரூமுக்குள் பாம்பு இருப்பதாக சொல்லி ஒரு கயிரை தூக்கி வீச இருவரும் பயந்து போய் வெளியே ஓடி வருகின்றனர்.
நேராக கார்த்தியிடம் சிக்கிக் கொள்ள, கார்த்திக் இவர்களை நிற்க வைத்து ஆங்கிலத்தில் நான் கேள்விகளை கேட்க இருவரும் பதில் சொல்ல முடியாமல் திணறுகின்றனர். இருப்பினும் கார்த்திக் எதையும் வெளிக்காட்டி கொள்ளாமல் சரி ஓகே என்று இவர்களிடம் அறிமுகமாகி கொண்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறான்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி