📅 Sunday, 13 September 2026 IST | ஆவணி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema September 13, 2026 07:37 AM

கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை!

கெனிஷா பெயரே நெகட்டிவ்.. யோகிபாபு படம் குறித்த பேட்டியில் வெளிவந்த உண்மை!

சென்னை: தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக மட்டுமின்றி, தற்போது 'I'm an Ordinary Man' என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராகவும் புதிய அவதாரம் எடுத்துள்ளார். இத்திரைப்படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, இப்படத்தின் இசை மற்றும் மேக்கிங் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களை ரவி மோகன், கெனிஷா பிரான்சிஸ் மற்றும் யோகி பாபு ஆகியோர் கலந்துகொண்ட சமீபத்திய பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஆரம்பத்துல தயக்கம் இருந்துச்சு: இயக்குநராக மாறிய அனுபவம் குறித்து பேசிய ரவி மோகன், ஆரம்பத்தில் எனக்கு டைரக்ஷன் பண்றதுக்கு தயக்கமா இருந்துச்சு. ஆனா இந்த படத்தோட டீம்தான் எனக்கு நம்பிக்கை கொடுத்து இயக்குநரா மாத்தினாங்க. ஒரு விஷயத்தை செஞ்சு பார்த்தாதான் அது வருமா இல்லையானு தெரியும். என்னோட திறமை எந்த அளவுக்கு இருக்குனு இப்போ ஓரளவுக்கு புரிஞ்சுக்கிட்டேன். இந்த படத்தின் மூலம் புதுசா நிறைய கத்துக்கிட்டேன், சில விஷயங்களை Unlearn-உம் பண்ணியிருக்கேன். ஒரு இயக்குநரா இந்த சினிமா துறையில இருக்குறது ரொம்பவே சந்தோஷமா இருக்கு

என் பெயரே நெகட்டிவிட்டி: இப்படத்தின் போஸ்டரில் இசையமைப்பாளர் இடத்தில் 'Hydro' என்ற பெயர் இருந்தது மிகப்பெரிய கேள்வியாக இருந்து வந்த நிலையில், அதற்குப் பதிலளித்துள்ளார் கெனிஷா, "அந்த 'Hydro' வேறு யாரும் இல்லை, நான் தான். அந்த சமயத்தில் என்னை பெயர் குறித்து பல செய்திகள் வந்தன, நிறைய நெகட்டிவ் செய்திகள் வெளிவந்ததால், என் சொந்த பெயரை போட்டால் இன்னும் நெகட்டிவிட்டி அதிகமாகும் என்பதால் மறைத்தோம். நானும் ரவி மோகனும் ரொம்ப நல்ல ஃபிரண்ட்ஸ். இந்த கதை பற்றி பல விஷயத்தை நான் பேசி இருக்கிறேன். இந்த கதையின் நரேஷன் ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. யார் மியூசிக் டைரக்டர்னு பேசிட்டே இருக்கும் போது, ரவிதான் 'நீயே நல்லா ஐடியா சொல்றியே... நீயே மியூசிக் பண்ணிடுனு வாய்ப்பு கொடுத்தார். அதேபோல, யோகி பாபுவை இதுவரை திரையில் பார்த்திராத ஒரு புதிய கோணத்தில் ரசிகர்கள் பார்க்க போகிறார்கள் என்றும் கெனிஷா தெரிவித்துள்ளார்.

படக்குழுவினரின் ஓபன் டாக்: ரவி மோகன் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி நடந்து கொள்வார் என்ற கேள்விக்கு, அவர் மிகவும் சப்போர்ட்டிவ் மற்றும் ஃப்ரீடம் கொடுக்கும் இயக்குநர் எனக் படக்குழுவினர் பாராட்டியுள்ளனர்.காலை 6 மணிக்கே ஸ்பாட்டில் இருப்பார். தினமும் காலையில் 'எல்லாம் நல்லதே நடக்கும்'னு சொல்லுவாரு. படக்குழுவினரை நம்பி முழு சுதந்திரம் கொடுப்பார். யோகி பாபுவும் பேசுகையில், ரவி மோகன் டைரக்ஷன் பண்ணுவாருனு எனக்கு முதல்லயே தெரியும். அவர் படம் இயக்கிய விதத்தைப் பார்த்தாலே அவருடைய திறமை தெரியும். படம் சூப்பரா வந்திருக்கு என பாராட்டிப் பேசியுள்ளார்.