கென்யா மொம்பாசா தமிழ் சங்கப் பொதுக்குழு
மொம்பாசா தமிழ் சங்கத்தின் 14ஆம் ஆண்டு பொதுக்கூட்டம், ஹிந்து யூனியன் கடற்கரையில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தொடர்ந்து, மொம்பாசா தமிழ் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவரான ராஜி இளங்கோவன் மற்றும் சாலமன் பாப்பையா ஆகியோரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2026-2027ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழுவைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல், தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட ராமச்சந்திரன் பட்டேல் மற்றும் பரமேஸ்வரன் ஆகியோரின் மேற்பார்வையில் ஜனநாயக முறையில் நடைபெற்றது.
புதிய செயற்குழு நிர்வாகிகள்
சங்கத்தின் நெறியாளர்கள்: சந்திரசேகரன், சுப்ரமணியன்,சாகுல் ஹமீத்
செயற்குழு உறுப்பினர்கள்: சாந்தி சுப்ரமணியன், சந்தோஷ், வினோத் வாசன், சந்திரகுமார், பிரபு, சசிகலா பிரபு
தமிழ் மொழி, பண்பாடு, சமூக ஒற்றுமை மற்றும் குடும்ப உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வரும் மொம்பாசா தமிழ் சங்கத்தின் இந்நிகழ்வு, அனைவரின் பாராட்டையும் பெற்று இனிதே நிறைவுற்றது.