📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports August 10, 2026 07:03 PM

கிறிஸ் கெயில் பேட்டை நான் பயன்படுத்தி இருந்தால், பல சிக்சர்களை அடித்திருப்பேன்.. புஜாரா கிண்டல்

கிறிஸ் கெயில் பேட்டை நான் பயன்படுத்தி இருந்தால், பல சிக்சர்களை அடித்திருப்பேன்.. புஜாரா கிண்டல்

கிறிஸ் கெயில் பேட்டை நான் பயன்படுத்தி இருந்தால், பல சிக்சர்களை அடித்திருப்பேன்.. புஜாரா கிண்டல்

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் சேதேஷ்வர் புஜாரா, வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் மற்றும் அவரது அதிக எடைகொண்ட பேட் குறித்தான ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2009 ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருவரும் இணைந்து விளையாடிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

"நான் ஐபிஎல் உலகிற்குள் நுழைந்த ஆரம்ப காலத்தில் கிறிஸ் கெய்ல் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்தார். நான் அவரிடம் சென்று அவருடைய பேட்டை வாங்கிப் பார்க்க விரும்பினேன். பொதுவாக, கிரிக்கெட் வீரர்களின் பேட் 1150 முதல் 1200 கிராம் வரைதான் எடை இருக்கும். ஆனால் அவரது பேட்டை நான் முதல்முறை கையில் தூக்கியபோது, என்னால் அதை எளிதாக அசைக்கக்கூட முடியவில்லை. அதன் எடை கிட்டத்தட்ட 1400 கிராம் இருந்தது. நான் அந்த பேட்டை வைத்து ஒரு பந்தை மட்டும் எதிர்கொண்டேன்," என்று புஜாரா கூறினார்.

"பின்னர் நான் கெய்லிடம் சென்று, இந்த பேட்டை உங்களால் எப்படி இவ்வளவு சுலபமாக வீச முடிகிறது என்று வியப்புடன் கேட்டேன். அந்த பேட்டைக் கொண்டு விளையாடினால் என்னால் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸராக அடிக்க முடியும், ஆனால் அந்த பேட்டைத் தூக்குவதற்குக்கூட எனக்கு போதுமான வலிமை இல்லை என்று அவரிடம் கூறினேன்," என்று புஜாரா தெரிவித்தார். இதுவரை இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 16 சிக்சர்கள் மட்டுமே அடித்துள்ளார்.

5 சர்வதேச ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ள அவர், ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. இதே போன்று 30 ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ள புஜாரா 4 சிக்சர் அடித்துள்ளார். மாறாக, கெயில் சர்வதேச டெஸ்டில் 98 சிக்சர்களும், ஒருநாள் போட்டிகளில் 331 சிக்சர்களும், ஐபிஎல் போட்டிகளில் 172 சிக்சர்களும் விளாசியுள்ளார்.

கேகேஆர் அணியில் ஒன்றாக விளையாடிய புஜாராவும் கெய்லும், பின்னர் 2011 முதல் 2013 வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலும் இணைந்து விளையாடினர். அதன் பின்னர் 2014ஆம் ஆண்டில் பஞ்சாப் அணிக்கு புஜாரா மாற்றப்பட்டார்.