📅 Saturday, 13 June 2026 IST | வைகாசி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu June 12, 2026 06:30 PM

களத்தில் இறங்கிய சிங்கப்பெண் அதிரடிப் படை; ஆடவர் கைது

களத்தில் இறங்கிய சிங்கப்பெண் அதிரடிப் படை; ஆடவர் கைது

சென்னை: வீட்டிற்குள் அனுமதி இல்லாமல் நுழைந்து, பெண்​ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆடவரைச் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்​படையின் அதிகாரிகள் கைது செய்து மகளிர் காவல்துறையில் ஒப்​படைத்​தனர்.

இதன்​மூலம், சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை சென்​னை​யில் தனது முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இந்​நிலை​யில், சென்னை அயனாவரம் பகு​தி​யில் 37 வயதுடைய பெண் ஒரு​வர் புதன்கிழமை (ஜூன் 10) பிற்பகல் வீட்​டில் தனி​யாக இருந்​துள்​ளார்.

அந்த நேரத்​தில் அதே பகு​தி​யைச் சேர்ந்த சுரேஷ் (36) என்ற ஆடவர் மது​போதை​யில் அப்​பெண்​ணின் வீட்​டுக்​குள் அத்​து​மீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால், அப்​பெண் அதிர்ச்​சி​யில் கூச்​சலிட்​டுள்​ளார்.

சத்தத்தைக் கேட்ட அக்​கம்​பக்​கத்​தினர் திரண்​டனர். இதையறிந்த அந்த நபர் பெண்ணைத் தள்​ளி​விட்டுத் தப்பி ஓடி​னார். இதுகுறித்து அப்​பகுதி மக்​கள் காவல்துறைக் கட்​டுப்​பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்​தனர்.

உடனே சிங்​கப்​பெண் சிறப்புப் படையைச் சேர்ந்த எஸ்ஐ ராஜேஸ்​வரியும், பெண் காவலர்​களும் விரைந்து சென்று தப்​பியோடிய சுரேஷைத் தேடிக் கண்டுபிடித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல்நிலை​யத்​தில் ஒப்​படைத்​தனர்.

கைது செய்யப்பட்ட சுரேஷை நீதி​மன்ற உத்​தர​வுப்​படி அதிகாரிகள் சிறை​யில் அடைத்​தனர்.

சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படை ஆரம்​பிக்​கப்​பட்டபின், பதி​யப்​பட்ட முதல்​ வழக்​கு இது என்​பது குறிப்​பிடத்​தக்​கது. பெண்​களின் பாது​காப்பை மேம்​படுத்​தும் வகை​யில் அமைக்​கப்​பட்ட சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப்​படையை முதல்​வர் விஜய் கடந்த 9ஆம் தேதி தொடங்கி வைத்​தார்.

பெண்​கள், குழந்​தைகளின் பாது​காப்பை உறுதிசெய்​ய​வும் அவர்​களுக்கு எதி​ரான குற்​றங்​களைத் தடுக்​க​வும் பொது இடங்​களில் பாது​காப்பை அதி​கரிக்​க​வும் இந்தப் படையைச் சேர்ந்த 70 குழுக்​கள் தமிழகம் முழு​வதும் முதல் கட்​ட​மாக அனுப்​பப்​பட்​டுள்​ளன.

சென்​னை​யில் சிங்​கப்​பெண் சிறப்பு அதிரடிப் ​படையைச் சேர்ந்த 12 குழுக்​கள் கண்​காணிப்​புப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளன. அக்குழுவினர் பள்​ளி, கல்​லூரி, பேருந்து நிலை​யம், மக்​கள் அதி​கம் கூடும் இடங்​களில் பெண்​களுக்கு எதி​ரான குற்​றங்​கள் நடைபெறுகின்றனவா எனத் தொடர்ந்து கண்​காணிப்பார்கள்.

சிங்கப்பெண் அதிகாரிகள், பெண்​கள்-குழந்தைகளுக்கான காவல்துறை அதிகாரிகளுடனும் ஒருங்​கிணைந்​து பணி​யாற்​றுவார்கள்.