கணக்கீட்டு பணியினை தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும் : திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ்நாடு மின்சார வாரியம் கணக்கீட்டுப் பணியினை தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்! என்று திருமவளவன் இது தொடர்பாக, விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;-
காலிப்பணியிடங்களை உள்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றோரை கொண்டு உடனடியாக நிரப்ப வேண்டும்! தமிழ்நாடு அரசிற்கு விசிக வலியுறுத்தல்!
புகார்கள் அதிகரித்துள்ளன
தமிழ்நாட்டில் சுமார் 3.52 கோடி மின் நுகர்வோர் உள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரம் வழங்கலில் தடை ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகும் நிலையே நிலவுகிறது. இதனால் அரசின் மீது களங்கத்தை கற்பிக்கும் சூழல் எழுகிறது. மின் தேவை அதிகரிப்பு, மின்நுகர்வோருக்கு சீராக மின்சாரம் வழங்க இயலாமை, மின் கணக்கீட்டில் தாமதம், கட்டணக் கணக்கீட்டில் குளறுபடி, மின் கட்டண உயர்வு போன்ற புகார்களும் நிகழ்காலத்தில் அதிகரித்துள்ளன.
இருள்நிலை உருவாகிறது
53,575 காலி பணியிடங்கள்
த.வெ.க அரசு பொறுப்பேற்றதும் வெளியிடப்பட்ட மின்துறை வெள்ளை அறிக்கையின்படி, 53,575 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் அவற்றில் 20,449 காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதில் மிகப் பெரும்பான்மையாக கணக்கீட்டாளர் பணியும் சேர்த்து செய்யக்கூடிய பல்நோக்கு கள உதவியாளர்கள் 12,500 பேரும், அதற்கடுத்து மின் தொழில்நுட்ப உதவியாளர்கள் 945 பேரும் பணியமர்த்தப்படுவார்கள் என வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
லிமிடெட் டெண்டர்
சீரமைப்பு பணிகள்
மின் வழங்கலில் தடை ஏற்படுவதற்கு துணைமின் நிலைய 'பீடர் டிரிப்' ஆகும் நேரத்தில் அவற்றை சரி செய்ய போதுமான 'ஆப்ரேட்டர்கள்' இல்லையென்பதாகும். இதனை சீரமைக்கும் பொறுப்பு துணைமின் நிலைய ஆப்ரேட்டர் நிலையிலுள்ள தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் இரண்டாம் நிலை இளநிலை பொறியாளர்கள் பணியாகும். இவர்கள் பணியில் இல்லை எனும்போது இத்தகைய நேர்வுகளில் போதுமான திறனும் பயிற்சியும் இல்லாத கள பணியாளர்களை கொண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதால், அவை முழுதிறனின்றி, காலதாமதத்தில் நடைபெறுகிறது.
தற்போது சுமார் 1800 ஆப்ரேட்டர் பணியிடங்கள் காலியாக இருப்பதோடு, 250 இரண்டாம் நிலை இளநிலை பொறியாளர்கள் பதவி உயர்விற்காகக் காத்து இருக்கிறார்கள். புதிதாக நிறுவப்பட உள்ள துணை மின் நிலையங்களின் எண்ணிக்கையில் 50 சதவிகிதத்திற்கு புதிய பதவி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்துயும் கணக்கில் கொண்டால் காலிப் பணியிடங்கள் சுமார் 2500 ஆக உயரும். இந்த ஆண்டிற்குள் 945 காலியிடங்கள் நிரப்பப்படும் என வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்முகத்தேர்வு
பணியமர்த்த வேண்டும்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.