📅 Saturday, 12 September 2026 IST | ஆவணி 27, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business July 28, 2026 03:33 AM

கரப்பான்பூச்சி கட்சிக்கு ரூ.1 கோடி நிதியுதவி; மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தாராளம்

கரப்பான்பூச்சி கட்சிக்கு ரூ.1 கோடி நிதியுதவி; மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தாராளம்

புதுடில்லி: 'நீட்' தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்தி, வழக்குகளை சந்தித்து வரும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் சட்ட உதவிக்காக, 1 கோடி ரூபாய் நிதியுதவியை மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வழங்கியுள்ளார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதை அடுத்து, 'நீட்' வினாத்தாள் கசிவு விவகாரத்தில், 36 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் சமீபத்தில் வாபஸ் பெற்றனர்.

இதை தொடர்ந்து மேற்கு வங்கம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

மத்திய அரசு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டதாக குற்றஞ்சாட்டிய கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலை நேற்று சந்தித்து ஆலோசித்தனர்.

அப்போது, அக்கட்சியினரின் சட்ட உதவிக்காக, 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என கபில் சிபல் அறிவித்தார். மேலும், நாடு முழுதும் உள்ள வழக்கறிஞர்கள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு உதவும் வகையில் தாராளமாக நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.