📅 Monday, 10 August 2026 IST | ஆடி 25, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics August 10, 2026 02:04 PM

கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி; திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி

கரும்பு தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்த விவசாயி; திமுகவுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி

சென்னை: கரும்பு தோட்டத்துக்குள்ள கான்கிரீட் போட்டு நடந்த ஒரு முக்கியமான விவசாயியை பற்றி சொல்ல அண்ணன் மறந்துட்டாரு என எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ரமேஷ் பதிலடி கொடுத்தார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில் திமுகவிற்கு பதில் அளிக்கும் விதமாக அமைச்சர் ரமேஷ் பேசி முடித்தார். அப்போது எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், ''இப்ப தான் தெரியுது எப்படி பிரசாரம் செய்து ஆட்சியை பிடித்திங்கனு, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் Reels contentஐ, correct ஆக அடிச்சு விடுறாறு, திமுக ஆட்சியில் 'ஆக்ஷன்'' மட்டுமே இருந்தது, 'ஆக்டிங்' இல்லை, என்றார்.

10 நிமிடத்தில்!

தொடர்ந்து வேளாண் பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கை மீது திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் பேசுகையில், ''திமுக ஆட்சியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடவில்லை, என்றார்.

கொள்முதலுக்கு பிறகான வாகனப் போக்குவரத்தில் முறைகேடுகள் நடைபெற்றது என பல்வேறு விவசாயிகள் போராட்டம் செய்தார்கள். அதெல்லாம் கண்ணுக்கு தெரியவில்லையா? கரும்பு கொள்முதல் விலைக்கு கீழ் அதிகாரிகள் ஒரு விலையை நிர்ணயித்த குற்றச்சாட்டு எழுந்தது.

கான்கிரீட் போட்டு...

சட்டசபையில் சிரிப்பலை!

திமுக ஆட்சிக்காலத்தில் அதிகாலை வேளையில் முதல்வரிடம் போன் வரும் என்று 5 ஆண்டுகளும் நாங்கள் டென்ஷனில் இருந்தோம். நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள், அதுதான் ஆச்சர்யமாக இருக்கிறது என்று அமைச்சர்களை பார்த்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கேட்க சட்டசபை கலகலப்பானது.

இதற்கு, ''நாங்கள் தினம் தினம் டென்ஷனில் இருக்கிறோம். சின்ன வாய்க்கால் பிரச்னைக்கெல்லாம் முதல்வரே போன் செய்து, சரி செய்தாகி விட்டதா என்று கேட்கிறார். அந்தளவுக்கு எங்களுக்கு பயம் இருக்கிறது'' என அமைச்சர் ஆனந்த் பதில் அளித்தார். புஸ்சி ஆனந்த், பிஸி ஆனந்தாகத்தான் இருக்கிறார் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதும் அவையில் சிரிப்பலை எழுந்தது.