கருணாநிதி பெயரை குறிப்பிட்ட அமைச்சர்: மன்னிப்பு கேட்டார் விஜய்
சென்னை: சட்டசபையில் நேற்று தி.மு.க., சார்பில், சாத்துார் ராமச்சந்திரன் பேசும் போது, வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் குறுக்கிட்டு, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசினார்.
தி.மு.க., - எ.வ.வேலு: சட்டசபையில், முதல்வர் மற்றும் முன்னாள் முதல்வர்களின் பெயர்களை குறிப்பிட்டு பேசக்கூடாது என்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு, அமைச்சர் பேசியது தவறானது. அதை அனுமதிக்கக்கூடாது.
தி.மு.க., பன்னீர்செல்வம்: எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்த போது, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவர், கருணாநிதியின் பெயரை குறிப்பிட்ட போது கண்டித்தார். அந்த கண்ணியம் காப்பாற்றப்பட வேண்டும்.
முதல்வர் விஜய்: முன்னாள் முதல்வரின் பெயரை குறிப்பிட்டு, அமைச்சர் பேசியது தவறு தான். அதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன்.
இவ்வாறு விவாதம் நடந்தது.