📅 Saturday, 15 August 2026 IST | ஆடி 30, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News August 15, 2026 09:00 AM

கட்டுமானக் குப்பை பொந்தியானில் குவிக்கப்படுவதாகக் கூறப்படுவதை அறிவோம்: என்இஏ

கட்டுமானக் குப்பை பொந்தியானில் குவிக்கப்படுவதாகக் கூறப்படுவதை அறிவோம்: என்இஏ

ஜோகூர் பாரு: சிங்கப்பூரிலிருந்து எடுத்துச்செல்லப்படும் கட்டுமானக் குப்பை, மலேசியாவின் ஜோகூர் மாலித்தில் உள்ள பொந்தியான் வட்டாரத்தில் குவிக்கப்படுவதாக வெளியான செய்தியைத் தாங்கள் அறிவதாக தேசிய சுற்றுப்புற வாரியம் (என்இஏ) தெரிவித்துள்ளது.

இதன் தொடர்பில் தகவல்களைச் சேகரிக்கத் தாங்கள் மலேசிய அதிகாரிகளைத் தொடர்புகொண்டுள்ளதாக வாரியம், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்தது.

சிங்கப்பூரிலிருந்து எடுத்துச்செல்லப்படும் கட்டுமானக் குப்பை, பொந்தியான் வட்டாரத்தின் பல இடங்களில் குவிக்கப்படுவதாக மலேசிய ஊடகமான கொஸ்மோ இம்மாதம் 8ஆம் தேதி செய்தி வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தேசிய சுற்றுப்புற வாரியம் பதிலளித்துள்ளது.