📅 Saturday, 17 October 2026 IST | புரட்டாசி 31, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sports October 16, 2026 11:03 PM

குரு உச்சத்தில் இருக்கான் போல.. இந்திய அணியின் துணைக் கேப்டனான இஷான் கிஷன்.. எப்படி நடந்தது?

குரு உச்சத்தில் இருக்கான் போல.. இந்திய அணியின் துணைக் கேப்டனான இஷான் கிஷன்.. எப்படி நடந்தது?

குரு உச்சத்தில் இருக்கான் போல.. இந்திய அணியின் துணைக் கேப்டனான இஷான் கிஷன்.. எப்படி நடந்தது?

மும்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணிக்கான துணைக் கேப்டனாக இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டி20 உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்திய அணிக்குள் புகுந்த இஷான் கிஷன், அடுத்தடுத்து முன்னேறி இந்திய ஒருநாள் அணியின் துணைக் கேப்டனாக வந்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டெஸ்ட் தொடருக்கான பயிற்சி மேற்கொள்வதற்காக, ஒருநாள் தொடருக்கு 2 அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடைசி 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட உள்ளார். சுப்மன் கில், கேஎல் ராகுல், பிரசித் கிருஷ்ணா மற்றும் அன்சுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களின் இடத்திற்கு திலக் வர்மா, குமார் குசாக்ரா, யாஷ் தாகூர் மற்றும் ஆகிப் நபி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல் கடைசி 2 போட்டிகளுக்கு இஷான் கிஷன் முக்கிய விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார்.

விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர். அதேபோல் துணைக் கேப்டனாக இஷான் கிஷன் தேர்வாகி இருக்கிறார். 6 மாதங்களுக்கு முன்னர் தான் இஷான் கிஷன் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்தார். இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்ததில் இருந்தே இஷான் கிஷனுக்கு குரு உச்சத்தில் இருக்கிறார் என்று வியக்கும் வகையில் வளர்ச்சி அமைந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணியை பாதி சீசன் வழிநடத்தி கேப்டனாக பெயர் பெற்றார். அதேபோல் துலீப் டிராபியை கேப்டனாக வென்றதோடு, இரட்டை சதம் விளாசி பலரையும் வியக்க வைத்தார். இதன்பின் இந்திய ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ள இஷான் கிஷன், தற்போது துணைக் கேப்டனாகவும் உயர்ந்துள்ளார்.

ஏற்கனவே சையத் முஷ்டாக் அலி, துலீப் டிராபி ஆகிய தொடர்களை இஷான் கிஷன் கேப்டனாக இருந்து வென்றுள்ளார். இதனால் இஷான் கிஷனையும் பிசிசிஐ தலைமை அடுத்த கேப்டனுக்கான ரேஸில் இணைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் இஷான் கிஷன் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.