📅 Friday, 02 October 2026 IST | புரட்டாசி 16, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Cinema October 01, 2026 11:03 PM

கூட்டணி தலைவர்களின் பிரசார கூட்டத்தை தவிர்க்கும் முதல்வர் விஜய்; பின்னணி என்ன?

கூட்டணி தலைவர்களின் பிரசார கூட்டத்தை தவிர்க்கும் முதல்வர் விஜய்; பின்னணி என்ன?

- நமது நிருபர் -

ஜெயலலிதா பாணியில் தனித்துவமான பிரசார அணுகுமுறையை முதல்வர் விஜய் பின்பற்றுவதால், மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பிரசாரக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

பொதுத்தேர்தல் அல்லது இடைத்தேர்தலின் போது, அ.தி.மு.க., கூட்டணி கட்சிகளின் பலம், தொகுதியின் அரசியல் சூழல், ஜாதி வாரியான ஓட்டுகள் ஆகியவற்றை கணக்கிடுவது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கம்.

அவரது பாணியை பின்பற்றி முதல்வர் விஜயும், மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தனித்துவமாகச் செயல்படுகிறார். ஏற்கனவே மதுராந்தகத்திலும், நேற்று தாராபுரத்திலும் தனியாக விஜய் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுராந்தகத்தில் இன்று, த.வெ.க., தலைமையிலான மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரசாரக் கூட்டம் நடைபெறுகிறது. ஆனால், த.வெ.க., தலைவரான முதல்வர் விஜய், இதில் பங்கேற்பதை தவிர்த்துள்ளார்.

இது குறித்து, த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது: மதுராந்தகம் தொகுதியில் வன்னியர், தலித் சமுதாய ஓட்டு வங்கி தான், வெற்றிக்கு அடித்தளமாக இருக்கிறது. கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியால், தலித் ஓட்டுகள் தானாகவே த.வெ.க.,வுக்கு கிடைக்கும்.

கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இருந்ததால், வன்னியர் சமுதாய ஓட்டுகள் அ.தி.மு.க.,வுக்கு கிடைத்தன; இம்முறை அந்த வாய்ப்பு இல்லை. எனவே, வன்னியர் சமுதாய ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு கிடைக்க, வி.சி.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், இன்று பங்கேற்கும் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொள்வதை விஜய் தவிர்த்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.