📅 Sunday, 18 October 2026 IST | ஐப்பசி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business October 18, 2026 01:00 PM

KVP vs NSC ஒப்பீடு : உங்களுடைய இலக்கை அதிக லாபத்துடன் அடைவதற்கு சிறந்த தேர்வு எது ? முழு கணக்கீடு இதோ

KVP vs NSC ஒப்பீடு : உங்களுடைய இலக்கை அதிக லாபத்துடன் அடைவதற்கு சிறந்த தேர்வு எது ? முழு கணக்கீடு இதோ

நடுத்தர குடும்பங்களும் தற்போது பங்குசந்தையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் பெரும்பாலான நடுத்தர குடும்பத்தினருக்கு ஏற்ற சேமிப்பு திட்டமாக இருப்பது இந்த போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்கள் தான். இதில் பங்குச்சந்தையை விட லாபம் என்பது குறைவு தான் என்றாலும் அரசு உத்தரவாதத்துடன் பாதுகாப்பான நிலையான ஒரு திட்டமாக இருக்கின்றது. அதன் காரணமாக தான் போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில் பெரும்பாலான நடுத்தர மக்கள் சேமித்து வருகின்றனர். இந்நிலையில் போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு திட்டங்களில் National Savings Certificate - NSC மற்றும் Kisan Vikas Patra - KVP ஆகிய இரண்டு திட்டங்களும் அடங்கும். இந்த இரண்டு திட்டங்களில் உங்களுடைய இலக்கை அதிக லாபத்துடன் பெறுவதற்கு சிறந்த திட்டம் எது என்பதனை ஒப்பிட்டு பார்க்கலாம்Kisan Vikas Patra - KVP மற்றும் National Savings Certificate - NSC ஆகிய இரண்டு திட்டங்களிலும் வெவ்வேறு வட்டி விகிதங்கள், முதலீட்டு விதிகள் இருக்கின்றன. இந்த இரண்டு திட்டங்களில் உங்களுடைய இலக்கை ஐந்து ஆண்டுகளில் அடைய வேண்டுமென்றால் எது சிறந்தது என்பதை இந்த ஒப்பீட்டின் மூலம் தெரிந்துகொள்வோம்NSC வட்டி -முதிர்வு காலம்தற்போதைய வட்டி விகிதம் -7.7%( ஆண்டு கூட்டு வட்டி )முதிர்வு காலம் -5 ஆண்டுகள்உதாரணத்திற்கு நீங்கள் 50000 ரூபாயை 5 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால் உங்களுக்கு ஐந்து வருடங்கள் கழித்து 22000 ரூபாய் வட்டியுடன் சேர்த்து மொத்தம் 72000 ரூபாய் கையில் கிடைக்கும்KVP வட்டி -முதிர்வு காலம்வட்டி விகிதம் - ஆண்டிற்கு 7.5%முதிர்வு காலம் -115 மாதங்கள் ( 9 ஆண்டுகள் 7 மாதங்கள்)உதாரணத்திற்கு நீங்கள் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்தால் 115 மாதங்கள் கழித்து உங்களுக்கு 2 லட்சம் ரூபாய் கிடைக்கும். நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்களோ 115 மாதங்களில் உங்களுக்கு இரட்டிப்பாக கிடைக்கும்சிறந்த தேர்வுஐந்து ஆண்டுகளில் உங்களுடைய இலக்கை அடைய வேண்டுமென்றால் அதற்கு சிறந்த தேர்வு NSC ஆக தான் இருக்க முடியும். ஏனென்றால் NSC திட்டத்தில் முதிர்வு காலமே ஐந்து ஆண்டுகள் தான். ஐந்து ஆண்டுகளில் அசல் தொகையுடன் சேர்த்து கூட்டு வட்டி லாபத்தையும் நாம் பெறலாம்.ஆனால் உங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாக்க நினைத்தால் நீங்கள் KVP யில் முதலீடு செய்யலாம். அங்கு 115 மாதங்களில் நீங்கள் முதலீடு செய்யும் தொகை இரட்டிப்பாகி கொடுக்கப்படும். இந்த திட்டமே உங்களுடைய முதலீட்டை இரட்டிப்பாகி கொடுப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான். எனவே 115 மாதங்களுக்கு முன்பு இந்த திட்டத்தை உடைத்து பணத்தை எடுத்தால் வட்டி லாபத்தை இழப்பதை தவிர அபராதமும் கட்ட வேண்டி வரும் என்பது குறிப்பிடத்தக்கது