📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Sri Lanka May 27, 2026 05:30 PM

இந்திய பயணிகளுக்கு குட் நியூஸ்: விசா கட்டணம் ரூ.4,150 மிச்சம்; தாய்லாந்திற்கு டஃப் கொடுக்கும் இலங்கை

இந்திய பயணிகளுக்கு குட் நியூஸ்: விசா கட்டணம் ரூ.4,150 மிச்சம்; தாய்லாந்திற்கு டஃப் கொடுக்கும் இலங்கை

வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்ல திட்டமிடும் இந்திய பயணிகள் பணத்தையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் இலங்கைக்குச் செல்வது இப்போது இன்னும் எளிதாகியுள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் எந்தவித விசா விண்ணப்பக் கட்டணமோ அல்லது செயலாக்கக் கட்டணமோ இல்லாமல் 30 நாட்கள் வரை இலங்கைக்கு இலவசமாகச் சென்று வர அந்நாட்டு அரசு இலவச 'எலக்ட்ரானிக்கல் பயண அனுமதி' (Free ETA - Electronic Travel Authorisation) வசதியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

கைவிரித்த தாய்லாந்து... ரூட்டை மாற்றிய இந்தியர்கள்; அடுத்த டார்கெட் இந்த நாடுகள் தான்

மே 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய கொள்கையின்படி, இந்தியப் பயணிகளுக்கு இதுவரை விதிக்கப்பட்டு வந்த 50 டாலர், இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,150 சுற்றுலா விசா கட்டணம் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த மெகா திட்டத்தில் இந்தியா, ஆஸ்திரேலியா, யுகே, அமெரிக்கா மற்றும் சீனா உட்பட 40 நாடுகள் இந்த இலவசப் பயணச் சலுகையைப் பெற்றுள்ளன.

இந்தியர்களுக்கு ‘இலவச விசா’ அறிவித்த இலங்கை

இலங்கை அரசு அறிவித்துள்ள இந்த புதிய விதிமுறைகளின்படி, இந்திய சுற்றுலாப் பயணிகள் தங்களின் பயணத்திற்கு முன்பாக ஆன்லைன் மூலமாக இந்த இலவச 'இ.டி.ஏ' அனுமதியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த இலவச அனுமதியின் மூலம் இந்தியர்கள் 30 நாட்கள் வரை இலங்கையில் தங்கிச் சுற்றிப் பார்க்கலாம்.

டபுள் - என்ட்ரி வசதி

இந்த 30 நாட்களுக்குள் இரண்டு முறை இலங்கைக்குள் சென்று வரும் வசதியும் இதில் வழங்கப்படுகிறது. இதனால் அண்டை நாடுகளுக்குச் சென்று வருபவர்களுக்கும், குறுகிய காலப் பயணம் மேற்கொள்பவர்களுக்கும் இது மிக வசதியாக இருக்கும்.

விசா நீட்டிப்பு

30 நாட்களுக்கும் மேலாக இலங்கையில் தங்க விரும்புபவர்கள், அந்நாட்டிற்குள் இருந்தபடியே அதற்கான வழக்கமான கட்டணத்தைச் செலுத்தி 270 நாட்கள் வரை தங்களது தங்குமிடம் காலத்தை நீட்டித்துக் கொள்ள முடியும். விசா கட்டணம் மட்டும்தான் ரத்து செய்யப்பட்டுள்ளதே தவிர, பயணத்திற்கு முன்பாக ஆன்லைனில் 'இ.டி.ஏ' அனுமதி வாங்குவது இன்னும் கட்டாயமான ஒன்றுதான். விசா இல்லாமல் நேரடியாகச் செல்ல முடியாது.

தேவையான ஆவணங்கள்