📅 Tuesday, 06 October 2026 IST | புரட்டாசி 20, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Tamil Nadu October 06, 2026 04:01 PM

லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி

லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி

லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?

SSC, RRB, BANKING போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்படவுள்ளதாகவும், இந்த வகுப்பில் தகுதிவாய்ந்த தேர்வர்கள் சேர்ந்து பயன்பெறுமாறு தமிழக அரசு சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

போட்டித்தேர்வுக்கு பயிற்சி

மத்திய,மாநில அரசு பணிகள், வங்கி வேலைகள், உள்ளிட்ட பணியிடங்களுக்கு போட்டி தேர்வு மூலம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் இந்த தேர்விற்காக பல இடங்களில் தனியார் அமைப்பு மூலமாக பயிற்சியானது வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முகாமல் இணைந்து படிக்க பல லட்சங்கள் வரை செலவிட வேண்டிய நிலை உள்ளது. இதனால் ஏழை எளிய மாணவர்கள பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு தேர்விற்கு தயாராக முடியாத நிலை நீடித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு சார்பாக இலவச பயிற்சி வகுப்பானது நடத்தப்பட்டு வருகிறது.

இலவச பயிற்சி முகாம் எப்போது.?

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், SSC, RRB, BANKING போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறிவழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் 08-10-2026 முதல் நடத்தப்பட உள்ளது. இவ்வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை அனைத்து வேலைநாட்களிலும் காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சிவகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டியில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக அலுவலக வேலை நாட்களில் அணுகுமாறு கேட்டுகொள்ளப்படுகின்றார்கள். மேலும், விவரங்களுக்கு, decgcguindy@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். மேலும் தங்களது விவரங்களை https://forms.gle/8TT9v5SwqAPxns058 கேட்டுக்கொள்ளப்படுகிறது. சென்னை மாவட்டத்தை சேர்ந்த தகுதிவாய்ந்த தேர்வர்கள், இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

ஃபோட்டோ கேலரி