📅 Tuesday, 08 September 2026 IST | ஆவணி 23, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics September 08, 2026 02:03 PM

மானிய கோரிக்கைக்கும் நேற்று முதல்வர் பேசியதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா.?

மானிய கோரிக்கைக்கும் நேற்று முதல்வர் பேசியதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா.?

மானிய கோரிக்கைக்கும் நேற்று முதல்வர் பேசியதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா.?

சென்னை: பதிலுரை என்ற பெயரில் சர்க்காரியா கமிஷன், முரசொலி மாறன் பற்றி உண்மைக்கு மாறான தகவல்களை பேசியுள்ளார் முதல்வர் விஜய் என்று ஜவாஹிருல்லா குறிப்பிட்டார். விதிகளுக்கு உட்பட்டு முதலவரின் பேச்சு இல்லை என்று சுட்டிக்காட்டி, எதற்காக முதல்வரின் பேச்சை நீக்க கோருகிறோம் என திமுக உறுப்பினர்கள் உரிய விளக்கங்களை விளக்கங்களை அளித்தபோதும் சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்க மறுப்பு தெரிவித்து விட்டார்.

முதல்வர் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க மாட்டேன் என சபாநாயகர் கூறியது சரியான முடிவல்ல என்றும் ஜவாஹிருல்லா கூறினார். ஜவாஹிருல்லாவை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதநேய ஜனநாயக கட்சியை சேர்ந்த தமிமுன் அன்சாரி, நேற்று பதிலுரை என்ற பெயரில் முதல்வர் பேசி இருக்கும் பல விஷயங்கள் சங்கடங்களை உருவாக்கியுள்ளது என்றார்.

மானியக் கோரிக்கைக்கு சம்பந்தம் இல்லாத பல விஷயங்களை பற்றி முதல்வர் விஜய் பேசினார், அதை நாடே பார்த்தது என்றார் தமிமுன் அன்சாரி. அவையில் தர்ணா செய்வது ஜனநாயகத்தின் அம்சம் தான் என்றார். திமுக உறுப்பினர்களை குண்டுக்கட்டாக வெளியேற்றியது நல்ல நெறிமுறை அல்ல என்றும் கணடனம் தெரிவித்தார்.