மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் உண்டு! நால்சார் பல்கலைக்கழக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட BCI தலைவர்
மாணவர்களுக்கு கருத்துச் சுதந்திரம் உண்டு! நால்சார் பல்கலைக்கழக மாணவர்களிடம் மன்னிப்பு கேட்ட BCI தலைவர்
ஹைதராபாத் நால்சார் சட்டப் பல்கலைக்கழகத்தின் 2026 ஆம் ஆண்டு பட்டதாரி மாணவர்களின் வழக்கறிஞர் பதிவிற்குக் விதிக்கப்பட்டிருந்த தடையைத் திரும்பப் பெற்றுக்கொண்ட இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் (BCI) தலைவர் மனன் குமார் மிஸ்ரா, மாணவர்களிடம் தனது மன்னிப்பைக் கேட்டுள்ளார். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யா காந்த் இந்த விவகாரத்தில் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்த சில நாட்களிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நால்சார் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் தங்களுக்கு விருப்பமான மாநில வழக்கறிஞர்கள் உடனடியாக பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி
இதற்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த தலைமை நீதிபதி சூர்யா காந்த், இது தமக்கும் மாணவர்களுக்கும் இடையிலான விஷயம் என்றும், இதில் BCI தலையிட வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
மாணவர்கள் சட்டப்பூர்வமாகத் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யவும், குரல் எழுப்பவும் முழு உரிமையுள்ளது என்றும், அவர்கள் தவறான கருத்துக்களைக் கூறினாலும் அதை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தலைமை நீதிபதியின் அதிரடித் தலையீட்டைத் தொடர்ந்து, BCI தனது முந்தைய தடையை உடனடியாக வாபஸ் பெற்று புதிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தீவிர விசாரணைக்குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் எந்தவொரு மரியாதையற்ற போராட்டத்திலும் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது.
எனவே 2026 ஆம் ஆண்டில் பட்டம்பெறும் மாணவர்கள் அனைவரும் எவ்வித விசாரணைக் கால தாமதமும் இன்றி, தாங்கள் விரும்பும் மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞராகப் பதிவு செய்து சட்டத் தொழிலைத் தொடங்கலாம் என BCI தலைவர் மனன் குமார் மிஸ்ரா முறைப்படி அறிவித்துள்ளார்.