📅 Wednesday, 14 October 2026 IST | புரட்டாசி 28, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics October 14, 2026 12:04 PM

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு.!! டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு நாளையுடன் நிறுத்தம்..

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு.!! டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு நாளையுடன் நிறுத்தம்..

மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவு.!! டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு நாளையுடன் நிறுத்தம்..

மேட்டூர்: மேட்டூர் அணை நீர் மட்டம் கடுமையாக சரிந்துள்ள நிலையில், டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் நீர் நாளையுடன் நிறுத்தப்பட உள்ளது. குறைவான நீர் வரத்து ஆனால் அதிகளவு நீர் திறப்பு காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் 2 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது 60 அடிக்குக் கீழ் சரிந்து உள்ளது. இந்த சூழலில் நாளையுடன் டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு நிறுத்தப்பட உள்ளது.

இன்றைய நிலவரப்படி நீர் வரத்து விநாடிக்கு 787 கன அடியாகவும், நீர் திறப்பானது 12,000 கன அடியாகவும் உள்ளது. அணையின் நீர் மட்டம் 59.58 அடியாகவும் மற்றும் நீர் இருப்பு 24.375 TMC-ஆகவும் உள்ளது. கடந்த செப்டம்பர் 1 முதல் டெல்டா பாசனத்திற்கு 45 நாட்களாக தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட பாசனத் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடைப் பகுதிகள் முழுமைக்கும் போய் சேரவில்லை.

டெல்டா மாவட்டங்களின் பல பகுதிகளில், குறிப்பாக பிரதான ஆறுகளில் இருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் மற்றும் பின்தங்கிய கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் இன்னும் சரிவரச் சென்றடையவில்லை. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தின் பல கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் போதிய அளவு கிடைக்கவில்லை. பெருவளந்தான் போன்ற பகுதிகளுக்கு தண்ணீர் சரிவரப் போய்ச் சேராததால், அங்குள்ள பயிர்கள் கருகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும் கருத்து தெரிவித்துள்ள விவசாயிகள் குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், தவெக அரசு டெல்டா விவசாயிகளின் நடைமுறைப் பேச்சைக் கேட்காமல், தவறான தேதியில் (செப்டம்பர் 1) மேட்டூர் அணையைத் திறந்துவிட்டதாகக் கடுமையாகக் குற்றம்சாட்டி, அரசுக்கு உரிய முன்யோசனை இல்லாததால் கடைமடை விவசாயிகள் நீரின்றிப் தவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.