📅 Monday, 21 September 2026 IST | புரட்டாசி 5, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
World News September 20, 2026 01:00 PM

மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வாருங்கள்; அமெரிக்காவுக்கு 7 முக்கிய நிபந்தனைகளை விதித்தது ஈரான்!

மீண்டும் பேச்சுவார்த்தை துவங்க வாருங்கள்; அமெரிக்காவுக்கு 7 முக்கிய நிபந்தனைகளை விதித்தது ஈரான்!

டெஹ்ரான்: அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் ஈரான் தரப்பில் 7 நிபந்தனைகள் கத்தார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை முடக்கும் வகையில் அந்நாட்டின் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மற்றும் மார்சில் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு மேற்காசியாவில் உள்ள அமெரிக்க தளங்களை தாக்கிய ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியது.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சரக்கு கப்பல்கள் மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்கள் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உலகளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 'மோதலை முடிவுக்கு கொண்டு வர ஈரான் - அமெரிக்கா பேச்சு நடத்த வேண்டும்' என, சீனா வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்க ஈரான் 7 நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் அமெரிக்காவிற்கு ஈரான் தெரிவித்துள்ளது.

அதேவேளையில், அமெரிக்கா தனது கோரிக்கைகளை நிராகரித்தால், மீண்டும் போர் மூளும்; அதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என ஈரான் எச்சரித்துள்ளது. நிபந்தனைகள் பின்வருமாறு:

* ஈரான் மீதான தாக்குதலை உடனே நிறுத்த வேண்டும்.

* ஈரானை ஒட்டி துறைமுகம், கடற்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க படைகளை திரும்ப பெற வேண்டும்.

* முடக்கப்பட்டுள்ள ஈரானுக்கு தேவையான நிதி, வருவாய் உடனே விடுவிக்கப்பட வேண்டும்

* ஹார்முஸ் ஜலசந்தி பாதுகாப்பு, அணுசக்தி திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் நீக்கம் தொடர்பான மீதமுள்ள நிபந்தனைகளை ஈரான் வெளியிடவில்லை. இது குறித்து ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி வெ ளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கு ஈரான் 7 நிபந்தனைகளை அறிவித்துள்ளது. ஈரானின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது, சந்தேகத்திற்கு இடமற்றது.

அமெரிக்கா தற்போது உருவாக்கியுள்ள இக்கட்டான சூழலிலிருந்து விடுபடவும், பிரச்னைகளை தவிர்க்கவும் விரும்பினால், ஈரானின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்வதைத் தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை'' என்றார்.