MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
MK Stalin On Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியின் சோம்பேறித்தனத்தால், காவிரியின் மைந்தர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
MK Stalin On Vijay: முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சியை கண்டித்து, திமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பங்கேற்றார்.
மு.க. ஸ்டாலின் காட்டம்:
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தலைமையில் தஞ்சையில் திரண்ட கழகம். உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும். காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர். விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் ஜவஹிருல்லா, தமிமுன் அன்சாரி மற்றும் நெல்லை முபாராக் ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வந்து சேராத காவிரி
ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை. ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் விவசாய விரோதி விஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்? முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
முதலமைச்சருக்கு நேரமில்லையா?
இதையும் படியுங்கள்: Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
திமுகவின் போராட்டம் தொடரும்
விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும். காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!
Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
தலைப்பு செய்திகள்
ஃபோட்டோ கேலரி