📅 Tuesday, 22 September 2026 IST | புரட்டாசி 6, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Business September 22, 2026 01:00 PM

மக்களே... நகை வாங்கப் போறீங்களா? இன்று விலை என்னன்னு தெரிஞ்சுட்டுப் போங்க!

மக்களே... நகை வாங்கப் போறீங்களா? இன்று விலை என்னன்னு தெரிஞ்சுட்டுப் போங்க!

மக்களே... நகை வாங்கப் போறீங்களா? இன்று விலை என்னன்னு தெரிஞ்சுட்டுப் போங்க!

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்துள்ளதால் நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கம் விலையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்ளோடு இருந்து வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 1,040 உயர்ந்து, ஒரு சவரன் ரூ 1,14,280க்கும், கிராமுக்கு ரூ 130 அதிகரித்து ஒரு கிராம் ரூ 14,285க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் (20.09.2026) ஞாயிறு விடுமுறை என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

வார தொடக்க நாளான நேற்று (21.09.2026) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,14,160-க்கும், கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.14,270-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,480-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.14,185-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கம் விலை போல வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.255-க்கும், கிலோவுக்கு ரூ.5,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.