📅 Thursday, 03 September 2026 IST | ஆவணி 18, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Latest News September 03, 2026 10:01 PM

மனைவியைப் பிரிந்த பிக்பாஸ் பிரதீப்...குழந்தையைப் பார்த்து கொள்வதில் சிக்கலா?

மனைவியைப் பிரிந்த பிக்பாஸ் பிரதீப்...குழந்தையைப் பார்த்து கொள்வதில் சிக்கலா?

மனைவியைப் பிரிந்த பிக்பாஸ் பிரதீப்...குழந்தையைப் பார்த்து கொள்வதில் சிக்கலா?

பிக்பாஸ் சீசன் 7 ல் பங்கேற்று போட்டியின் பாதியிலே வெளியேற்றப்பட்ட பிரதீப் ஆண்டனி,அவருடைய திருமண வாழ்க்கையிலிருந்து விலகுவதாக சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ‘வாழ்’, ‘டாடா’ உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பிரதீப் ஆண்டனி. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 7 ல் நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர்,ஆட்டத்தின் பாதியிலே ரெட் கார்டு வழங்கப்பட்டு போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு உதவி இயக்குநராப் பணியாற்றிய இவர், 2024 ஆம் ஆண்டில் நீண்ட நாள் காதலியான பூஜாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்,தனது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் திருமண உறவு குறித்து பிரதீப் ஆண்டனி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டுள்ள கருத்துகள் தற்போது கவனம் பெற்றுள்ளன.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: “என் நண்பர்களிடம் இந்தக் குழந்தையை விற்றுவிடுவது குறித்து நான் நிறைய முறை கேலியாகப் பேசியிருக்கிறேன். ஒரு குழந்தைக்குப் பொறுப்பாக இருக்கும் அளவுக்கு நான் மிகவும் பொறுப்பற்றவனாகவும், எதையும் யோசிக்காமல் செயல்படுபவனாகவும் இருக்கிறேன் என நினைத்ததால், பூஜா கர்ப்பமானபோது, சிலரிடம், ‘இந்தக் குழந்தைக்காக முன்பதிவு செய்துகொள்ளுங்கள்; அதற்காக சில லட்சங்கள் எனக்குக் கொடுங்கள்’ என்று சொன்னேன்.

ஆனால், குழந்தை பிறந்த பிறகு, ஏதோ ஒரு விதத்தில் அதன் மீது எனக்கு பாசம் ஏற்பட்டுவிட்டது. அது நான் சொல்வதைக் கேட்டு சந்தோஷமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் என் கைகளில் ஏதோ ஒன்று மகிழ்ச்சியாக இருப்பதைப் பார்க்கும்போது, நானும் புதிதாகப் பிறந்தவன் போல உணர்ந்தேன். ஆனால், இப்போது அது என்னிடம் இல்லை. அந்தக் குழந்தையுடன் நான் கடைசியாக மகிழ்ச்சியாக இருந்தது இதுதான். இப்போது, அதை நான் பார்த்து ஒரு மாதமாகிவிட்டது. ஒரு மாதத்திற்கு முன்பே நான் அந்தக் குழந்தையை விட்டுக்கொடுத்துவிட்டேன்; மனதளவில் கைவிட்டுவிட்டேன். ஆனால், அது கொஞ்சம் கொஞ்சமாக என்னை உள்ளுக்குள் தின்றுகொண்டிருக்கிறது.

எனக்கு எப்போதுமே ஒரு குடும்பம் வேண்டும். ஒரு நல்ல அப்பாவாக இருக்க வேண்டும். நான் வளர்ந்த சூழலுக்கு முற்றிலும் எதிரான ஒரு சூழலை என் குழந்தைக்குக் கொடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் தோற்றுவிட்டேன். ‘நீ எதை அதிகமாகப் பயப்படுகிறாயோ, அதையே நீ ஈர்க்கிறாய்’ என்பதை தற்போது கற்றுக்கொண்டிருக்கிறேன்.

நான் தவறான நபரைத் திருமணம் செய்துவிட்டேன் என்று நினைக்கிறேன். திருமணமானதிலிருந்து ஒவ்வொரு நாளும் மோசமான மனிதனாக மாறிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் எனக்குச் சம்பந்தமே இல்லாத, என் உலகத்தின் ஒரு பகுதியாக இல்லாத ஒருவரின் அருகில் விழித்தெழுந்துகொண்டிருந்தேன். என் உலகத்தின் ஒரு பகுதியாக இருக்க அவளும் என்னைப் புரிந்துகொள்ளவோ, முயற்சி செய்யவோ இல்லை. அவள் இன்னும் அவளுடைய குடும்பத்துடனும், அவளுடைய வாழ்க்கையுடனுமே இருந்தாள்.

ஒவ்வொரு நாளும் நான் ஒருவருடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டிருக்கிறேன் என்ற உணர்வு எனக்கு இருந்தது. இன்னொருவருடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ்வதை எப்படி சமாளிப்பது என்று உண்மையில் எனக்கே தெரியவில்லை.

தினமும் இரண்டு முற்றிலும் எதிர்மறையான மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் மோதிக்கொண்டு, தாங்கள் யாராக இருக்கிறார்களோ அதற்காகவே ஒருவரை ஒருவர் வெறுப்பது போல இருந்தது. அது எங்களிருவருக்குமே அநியாயமாகத் தோன்றியது.” "இறுதியாக நான் என்றும் ஒரு அநாதை தான் என்ற சாபத்தை ஏற்றுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்." பிரதீப் ஆண்டனியின் இந்த பதிவு சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.