📅 Monday, 14 September 2026 IST | ஆவணி 29, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
இணையத் தாக்குதல், மோசடி பாதிப்புகளைச் சமாளிக்க காப்புறுதிகளை அதிகம் நாடும் சிங்கப்பூர் நிறுவனங்கள் உதவி தேவைப்படும் சிறார்களுக்கு நன்கொடை திரட்டிய காற்பந்தாட்டம் மேட்டூர் அணை திறந்து 12 நாளாகியும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை: அதிமுக மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு 14 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: காவல் ஆய்வாளரை அரிவாளால் வெட்டிய குற்றவாளி துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு! பெரம்பலூர் அருகே நாட்டார்மங்கலத்தில் தவெக கிளைச் செயலாளருக்கு அரிவாள் வெட்டு: பக்கத்து வீட்டுகாரர் வெறிச்செயல் இடைத்தேர்தல் களத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள்; தவெகவிற்கு நெருக்கடியா?

Cinema July 30, 2026 07:31 PM

மனிதநேயப் பணிகள் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்; முதல்வர் விஜய்

மனிதநேயப் பணிகள் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும்; முதல்வர் விஜய்

சென்னை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும் என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

அவரது அறிக்கை: தமிழகத்தின் முதல் பெண் டாக்டரும், மெட்ராஸ் மாகாண சட்டசபை மேலவைக்கு 1927ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, ஆதரவற்ற பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் புகலிடமாக 'அவ்வை இல்லம்', புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக 'அடையாறு புற்றுநோய் நிலையம்' போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார். அவரது உயரிய லட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.