முதல்வர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து: அமைச்சர் செங்கோட்டையன்
ஈரோடு: முதல்வர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
அவரது பேட்டி;
காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்தில் எல்லாரையும் ஒருங்கிணைத்து தான் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதில் கருத்து வேறுபாடுகள் இல்லை.
ஒரு மாநிலத்திலேயே அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு இருக்கிறது என்பதை உதாரணம் காட்டி, எங்களிடத்தில் கேள்வி கேட்பதைக் காட்டிலும், எல்லோரும் ஒருங்கிணைந்து டெல்டா விவசாயிகளை வாழ வைக்க வேண்டும் என்பது எல்லோருடைய கனவு.
அந்த கனவு நிறைவேறும் காலம், வெற்றிகரமாக நேற்று துவங்கப்பட்டு உள்ளது. நல்ல ஒரு முதல்வர் நமக்கு கிடைத்திருக்கிறார். அந்த காலம் பொற்காலமாக அமையும். முதல்வர் வாய் திறந்தால் பலருக்கு ஆபத்து வருகிறது, அதனால் தான் அவர் வாய் திறப்பது இல்லை.
வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் ஆக உள்ளது. அதில் அவர்களின் நலன்களுக்கான அனைத்து திட்டங்களும் இடம்பெறும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.