📅 Monday, 17 August 2026 IST | ஆவணி 1, பராபவ வருடம்
Tamilzha Alt Logo Text சார்பற்ற நடுநிலைச் செய்திகள்
முக்கிய செய்திகள்
Politics June 02, 2026 05:01 AM

முதல்வர் விஜயை வரவேற்றது ஏன்: காரணம் சொல்கிறார் துரை வைகோ

முதல்வர் விஜயை வரவேற்றது ஏன்: காரணம் சொல்கிறார் துரை வைகோ

திருச்சி: திருச்சி வந்த முதல்வர் விஜயை மதிமுக பொதுச்செயலர் வைகோவின் மகனும், திருச்சி எம்பியுமான துரை வைகோ வரவேற்றார்.

இதன் பிறகு நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முதல்முறையாக வந்த திருச்சிக்கு வந்த முதல்வர் விஜயை இத்தொகுதி எம்பி என்ற காரணத்தினால், வரவேற்றேன். தொகுதி சம்பந்தமாக கோரிக்கை அளிக்கும் சூழல் கிடையாது.

மத்திய அரசின் ஒத்துழைப்போடு மாநில அரசின் உதவியும் கண்டிப்பாக தேவைப்படுகிறது.அப்படிப்பட்ட திட்டங்களுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கும் என நம்பிக்கை உள்ளது.

முதல்வரை மீண்டும் சந்திக்கும்போது, கோரிக்கை வைப்பேன். அதனை பத்திரிகையாளர்களிடம் தெரிவிப்பேன். மக்களுக்காக முதல்வரை சந்திக்கும் வாய்ப்பை நான் உருவாக்குவேன்.

புதிய அரசு பதவியேற்றதும் அதிகாரிகள் இடமாற்றம் நடக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் புதிய அதிகாரிகள் பொறுப்பேற்ற பிறகு அவர்களுக்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். 24 மணி நேரத்தில் மாற்றத்தை கொண்டு வர முடியும். மாற்றம் கொண்டு வர 6 மாதம் தேவைப்படுகிறது.

குற்றங்கள் நடக்கிறது. அதற்கு காரணமான குற்றவாளிகள் கைது , வழக்குப்பதிவு செய்வதில் தாமதம் கிடையாது. 100 சதவீதம் குற்ற சம்பவங்களை தடுக்க முடியாது. வளர்ந்த நாடுகளிலும் நடக்கிறது. குற்ற சம்பவங்கள் நடக்கும் போது, குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது தவறு.

திமுக ஆட்சியின் போது 3 ஆண்டு கழித்து மகளிர் உரிமைத்தொகை அளித்தது. நிதிச்சுமை இருந்தது. தற்போது புதிய அரசு அறிவித்துள்ளது. தேர்தல் அறிக்கையை காலப்போக்கில் நிறைவேற்ற வேண்டும் என்பது எனது கருத்து.

எங்கள் எம்எல்ஏக்கள் துரதிர்ஷ்டவசமாக திமுக சின்னத்தில் போட்டியிட்டோம். ஆதரவு கொடுக்கக்கூடிய சூழ்நிலை கிடையாது. பிற இயக்கங்கள், காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு அளித்துள்ளனர். ஜனாதிபதி ஆட்சி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். தனிப்பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், தனிப்பெரும் கட்சியாக தவெக உள்ளது. அரசியலமைப்பின்படி ஆட்சி அமைத்துள்ளனர். மக்கள் தீர்ப்பு மகேசன்தீர்ப்பு என்பதால் மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்.

இம்மாதம் 27 ம் தேதி பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது. அதில், கூட்டணியில் தொடர்வது குறித்து நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.