நாளை கடைசி நாள்; இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
சென்னை: தாராபுரம், மதுராந்தகம் தொகுதியில் இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வரும் அக்டோபர் 6ம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. திமுக, தவெக, அதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் ஆகிய கட்சிகளுக்கு இடையே 5 முனைப்போட்டி நிலவுகிறது. கம்யூனிஸ்ட் கட்சியை மற்ற 4 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. கம்யூனிஸ்ட் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவிக்கிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய நாளை செப்., 17ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் இன்று (செப் 15) தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனுத்தாக்கல் செய்தார். மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடும் பரந்தாமனும் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதியின் வாழ்த்துக்களுடன் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளேன். தவெக வேட்பாளர்களை நாங்கள் தொகுதி மக்களை ஏமாற்ற மாட்டோம்; எத்தனை முனைப்போட்டி வந்தாலும் திமுக வெற்றி பெறும், என்றார்.
நாளை அதிமுக, தவெக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்வார்கள்; வரும் செப்.,19ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும். ஓட்டு எண்ணிக்கை அக்டோபர் 9ம் தேதி நடைபெறும். அன்றைய தினம் இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது தெரிந்துவிடும்.
பிரத்யேக வீடியோ!
திமுக வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்; சுறுசுறுப்பான இடைத்தேர்தல் களம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்